மேட்டூர் அணையில் சரிந்த தண்ணீர் மட்டம்… டெல்டா சம்பா சாகுபடி குறைந்தது..


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்தது. 

டெல்டா மாவட்டங்களில் கடந்த 2022-23 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3.31 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு(2023-24ஆம் ஆண்டு) 1.77 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து குறைவாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இருக்கும் தண்ணீரை வைத்து குறைவாகவே விவசாயிகள் சம்பா பயிரிட்டுள்ளனர். 

Must Read: மருத்துவ காளான்களை உருவாக்கும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம்…

கர்நாடகாவில் இருந்து காவிரியில் வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 83 டிஎம்சி தண்ணீர் பெற வேண்டும். ஆனால், இந்த முறை சராசரியாக பாதிக்கும் குறைவாக அதாவ்து 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது. 

சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறக்கப்பட்டதால் பல விவசாயிகள் நாற்றங்கால் விட்டு , பின்னர் வயலில் நடவு செய்யும் பாரம்பர்ய முறையில் இருந்து மாறி நேரடி விதைப்பு முறையில் சம்பா பயிரிட்டுள்ளனர். 

சம்பா நெற்பயிர் புள்ளி விவரம் குறித்து இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் 1,76,676 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 1,20,732 ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி விதைப்பு முறையில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்கி இருக்கின்றனர். 

அதிக பட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 60, 732 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மிக குறைந்த பட்சமாக வெறும் 89 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்து ஆங்கில நாளிதழ் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

#distressdeltafarmers #deltafarmers #sambacrop #kaverydelta

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments