உடல் உழைப்பு, பசிக்கு சிறுதானிய உணவுகள்… பழங்குடியினரின் வாழ்வியல்!
பழங்குடியின கிராமங்களில் சித்த மருத்துவம்
பழங்குடியினரின் வாழ்க்கை அனுபவங்கள்
வேளாண் உழைப்பு, சிறுதானிய உணவுகள்
‘இன்னக்கி ஊர்ல கல்யாணம்… யாரும் வீட்டுல இருக்க மாட்டாங்க…’ எனும் குரல்கள் மலையில் எதிரொலிக்க, திருமணம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே நடமாடும் சித்த மருத்துவ வாகனத்தைச் செலுத்தினோம்!
‘சித்த மருத்துவ முகாமுக்காக வந்திருக்காங்க… வாங்க பாத்துக்கலாம்…’ எனும் பேச்சு பரவ, ஊர் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாகனம் நோக்கி வரத் தொடங்கினர்!
அங்கிருந்த கோயில் வாசலிலேயே அமர்ந்து மருத்துவம் பார்க்கத் தொடங்க, மெல்ல மெல்ல அன்பும் வரவேற்பும் அதிகமானது!...மருத்துவம் பார்த்துக்கொண்டே, அவர்களது வாழ்வியல் குறித்து பேச்சுக் கொடுக்க மலைப்பகுதிக்கான சுவாரஸ்யம் பற்றிக்கொண்டது!
Must Read: கோடைகாலத்தில் நம் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகள் என்ன தெரியுமா?
அந்த ஊரில் யாருக்குத் திருமணம் என்றாலும், அவ்வூரே ஒன்று சேர்த்து நடத்தி வைக்குமாம்! முதல்நாள் விருந்து, மறுநாள் காலை விருந்து… இசை என ஊரே கொண்டாட்ட கோலத்திற்குச் சென்றுவிடுமாம்!... அரச மரத்தை சுற்றி வரும் மணமக்கள் ஊர்வலம்… சுற்றத்தாரின் குதூகலம்… உணவு… என மலைத் திருமணத்தையும் ரசிக்க முடிந்தது!.
முகாம் தொடங்கியது முதல் எங்கள் அருகிலேயே இருந்து ஊர் பற்றிப் பேச்சுக்கொடுத்த எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் அனுபவம் எனது எழுத்துக்கும் கைக்கொடுக்கும். எதிர்பார்த்ததை விட, அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளர்களைப் பார்த்ததில் கொஞ்சம் வருத்தமே!

விவசாயத்திற்குத் தேவையான உழைப்பும், வலிமைக்குத் தேவையான சிறுதானிய உணவுகளுமே அம்மக்களை பெரிதளவில் நோய்த் தாக்காமல் வைத்திருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வளிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையில் அடுத்த கிராமத்தை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது!...
Must Read: ஓஎன்டிசி தளத்தில் இணைக்கப்படும் தெரு உணவு விற்பனையாளர்கள்…
ஏலகிரி நடமாடும் சித்த மருத்துவக் குழுவின் பயணம் மங்களம் கிராமத்தில் தொடர்ந்தது. பல வீடுகளில் நினைவுகளைத் தூண்டிய திண்ணைகள்! திண்ணையிலேயே அமர்ந்து சித்த மருத்துவம் பார்ப்போமே என்று தொடங்கினோம்!...
திண்ணையில் அமர்ந்து சிகிச்சை அளித்தபடியே பழங்குடியின மக்களின் வாழ்வியல் கதைகளைக் கேட்பது சுகமானது! முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த வீட்டுத் திண்ணையில் சாய்ந்துகொண்டே செவிக்குள் அனுமதித்த சுகமான நினைவுகள் அழகானவை! பல அனுபவங்களைச் சொல்லும் மலைவாழ் மனிதர்கள்… மருத்துவம் பார்ப்பதோடு அவர்கள் சொல்லும் கிராமத்து அனுபவங்களை சேகரமாக்கிக்கொண்டே இருக்கிறேன்!...
ஏலகிரி மலையில் பறவைகளைத் தேடி கிராமம் கிராமமாக ரசித்து நகர்ந்த நாட்களின் நினைவுகளோடு, இப்போது சித்த மருத்துவத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க கிராமம் கிராமமாக நகரப் போகிறேன், குக்குறுவானின் இடைவிடா ஓசை மலை முழுவதும் எதிரிலித்துக்கொண்டே இருந்தது!...ஏலகிரியில் சித்த மருத்துவத்தோடு பயணிப்போம்!...
#tribalslife #tribalslifestyle #tribalsfoods
ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More