குதிகால் வலி தீர ஏற்ற உணவு முறைகளும், தீர்வுகளும்


குதிகால் வலிக்கு காரணங்கள் 

உடல் எடை அதிகரிப்பால் குதிகால் வலி 

பயறு வகைகளை உண்ண வேண்டும் 

பிரண்டை, முடக்கத்தான் பலன் தரும் 

குதிகாலில் எலும்புகள் இணையும் இடத்தில்தோலும் எலும்பு இணையும் பகுதியின் நடுவில் சவ்வு அமைப்பு உள்ளது இந்த சவ்வு அமைப்பில் பாதிப்பு ஏற்படும் போது குதிகாலில் வலி உண்டாகிறது. குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு பிண்ட தைலம் எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.

குதிக்கால் வலி காரணங்கள்

* கரடு முரடான பாதையில் நடப்பது.

* High heels எனப்படும் குதிகால் மேலே தூக்கியிருக்கும்படி செய்யப்பட்ட காலணிகள், அதிகமாக நடப்பது.

* அதிக குளிர், தண்ணீரில் நடப்பது.

* அதிக எடையை தூக்குதல்

* வாதத்தை அதிகரிக்கும் உணவுகள்.

* அதிக உடல் எடை

Also Read: ஆகஸ்ட் 25: இன்றைய இயற்கை வேளாண் உணவுப்பொருட்கள் சந்தை

அறிகுறிகள்

* நடக்க சிரமமாக இருக்கும்.

* இரவில் ஏற்படும் வலி அல்லது ஓய்வில் இருக்கும்போது உண்டாகும் குதிகால் வலி.

* வலி பல நாட்கள் நீடிப்பது.

* குதிகால் கருமை அடைதல், வீக்கம்

* ஜுரம்.

காலணிகள்

குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால் மென்மையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

ஹீல்ஸ் செருப்புகள் காரணமாக குதிகால் வலி

குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண் எனத் தெறிக்கிற மாதிரிநியுரோமாஎனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசை நேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டு வலியும் ஏற்படும்.

உடல் எடை அதிகமாவதால் வரும் குதிகால்வலி நீங்க 

உடல் பருமன் முக்கிய காரணம். அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.

இதை தடுக்க நீங்கள்உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.

வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 M .L அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன்

(60 M .L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 M .L - 30 M .L வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும்.

தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 M .L தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

குதிகால் வலி தீர பயறு வகைகள் சாப்பிடுங்கள்

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.

.கையிலே இருக்கும் வைத்தியங்கள் 

1. கோரை கிழங்கு 10 கிராம்

2. அஸ்வகந்தா 10 கிராம்

3. முடக்கத்தான் 10 கிராம்

4. இஞ்சி 10 கிராம்

5. பூண்டு 10 கிராம்

6. மாவிலங்கப்பட்டை 10 கிராம்

7. விராலி இலை 10 கிராம்

செய்முறை

இவைகளை எடுத்து 300 மில்லி நீர் விட்டு 60 மில்லியாக வற்ற வைத்து காலை,மாலை உணவுக்கு முன் குடித்து வர சரியாகும்.

வெற்றிலை நெல்லிரசம் 

தேவையானவை

முழு நெல்லிக்காய் - 10, வெற்றிலை - 20,

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,

காய்ந்த மிளகாய் - 4,

பூண்டு - 6 பல்,

வால் மிளகு,

சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

நல்லெண்ணெய் - 2

டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

Also Read:துரித உணவுகளில் உள்ள எம்.எஸ்.ஜி எனப்படும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்

செய்முறை

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

குருந்தொட்டிசூரணம் பால்கசாயம்

 தேவையான பொருள்கள்

குருந்தொட்டி சூரணம்-ஒரு தேக்கரண்டி

பூண்டு-நான்கு பற்கள் நசுக்கியது

பால்- நூறு மில்லி

தண்ணீர்-இருநூறு மில்லி

சேர்த்து சிறுதீயில் நன்கு கொதிக்க வைத்து நூறு மில்லியாக சுருக்கி இறக்கி அத்துடன் இரண்டு மில்லி உள்ளுக்கு சாப்பிடும் விளக்கெண்ணெய் கலந்து இரவு படுக்கும் முன் குடித்து வர கால் பாத வலி எரிச்சல் குணமாகும்.

அனுபவத்தில் சில

காலை,இரவு உணவுக்கு முன் தினசரி அமுக்குரா சூரணம் 1/2 டீஸ்பூன் சூடாண வென்நீரிருடன் சாப்பிட்டுவரவும்.பிண்ட தைலம் இரவு மட்டும் வலி உள்ள இடத்தில் தேய்த்து மறுநாள் காலை சூடான வெந்நீரில்  ஒத்தடம் கொடுக்க வேண்டும்.குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம்.

திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும். தவிடும் உப்பும் வறுத்து ஒத்தடம் தரலாம்.தினசரி மிதமான வென்னீரில் கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அமிழ்த்தி வைத்திருக்கலாம்.

வில்வக்காய் கிடைத்தால் அதை சுட்டு நசுக்கி எருக்கிலை பழுப்பை அதன் மேலிட்டு குதிகால்களை ஒத்தடம் கொடுக்கலாம். (வலி தீரும் வரை தினசரி செய்க) மிகு பித்தம் குறைய மைக்கொன்றை இலைகளை காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட (சுமார் 48 நாட்கள்) வெகுவாய் வலியற்றுப் போகிறது மாயமாய்.

திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.

சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.

முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம்

சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும். முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல் நல்லது முடக்கறுத்தான் ரசம் மிகவும் நல்லது. 

செங்கல்லை அடுப்பில் சூடுபடுத்தி, 4/5 வெள்ளெருக்கு இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக, செங்கல் மேல் பரத்தி, குதிகாலை வைத்து10  நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்ததில்,4 நாட்களிலேயே நல்ல நிவாரணம்.3 மாதங்களுக்கு பின் நொண்டாமல் நடக்க முடிகிறது. நம்பிக்கையிருப்பவர்கள் செய்து பார்க்கலாம்.

சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும்கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 M .L.) . சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு ☎999 437 9988 ☎81 4849 6869 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். 

-வைத்தியர் முகம்மது யாஸீன், மேலப்பாளையம் திருநெல்வேலி

#HealPain  #AvoidHealPain #PattiVaithiyam  #VeetuVaithiyam #FoodsForHealPain #CureForHealPain #EatHealthyFood 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 


Comments


View More

Leave a Comments