ஆரோக்கியசுவை சிறப்பு செய்தியில் இன்று பிரண்டை மூலிகையை பயன்படுத்துவதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.
வேளாண்மை, உணவு,வாழ்வியல் முறை குறித்து அன்றாடம் நிகழும் செய்திகளின் தொகுப்பை வீடியோ வடிவில் ஆரோக்கிய சுவை இணையதளம் வழங்குகிறது. இன்றைய ஆரோக்கிய சுவை தலைப்பு செய்திகள்
வயிற்றுவலி என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். நமது தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாகவும், வாழ்க்கை சூழல்காரணமாகவும் வயிற்று வலி ஏற்படக் கூடும். மன உளைச்சல், வேதனை ஆகியவற்றின் போதும் வயிற்றில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
வேளாண்மை, உணவு,வாழ்வியல் முறை குறித்து அன்றாடம் நிகழும் செய்திகளின் தொகுப்பை வீடியோ வடிவில் ஆரோக்கிய சுவை இணையதளம் வழங்குகிறது. இன்றைய ஆரோக்கிய சுவை தலைப்பு செய்திகள்
காராளர் மரபுவழி வேளாண் பண்ணையின் நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்து வருகின்றனர். கைக்குத்தல் அரிசியை மதிப்புக் கூட்டி மேல் தோலை எடுக்காமல், உரலில் குத்தி எடுப்பது போல புது முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இன்று கேன்சர் மருத்துவமனைகள்ல் கூட்டம் குவிவதற்குக் காரணமே நம் உணவு வழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம்தான். நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே கேன்சரை எதிர்க்கும் சத்துகள் உள்ளன. இயற்கை மருத்துவர் தீபா சரவணன் குறிப்பிடும் இந்த உணவுப் பொருட்களை கேன்சர் நோயாளிகள் மட்டும் அல்ல யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
நண்டு குழம்பின் ருசியும் அலாதியான ஒன்று. ஆனால், நண்டு குழம்பு வைப்பது என்பதும் சிலருக்கு கைவந்த கலைதான். அதிலும் கடல் நண்டு குழம்பு அற்புதமான சுவையுடன் இருக்கும். இங்கே கடல்நண்டு கிரேவி எப்படி வைப்பது என்று சொல்லித் தருகின்றனர். வீடியோ நன்றி My Country Foods
பிரியாணியில் சேர்க்கப்படும் இறைச்சியைப் பொருத்து அதன் பெயரும் மாறுபடுகிறது. வழக்கமாக நாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி என்றே சாப்பிட்டிருப்போம். வழக்கமாக மீன் உணவுகளைக் கொண்டு அவ்வளவாக யாரும்பிரியாணி செய்வதில்லை. ஆனால், இறால் உணவு அதிகமாக சாப்பிடும் பழக்கம் வந்தபிறகு, இறால் பிரியாணியும் சமைக்கும் பழக்கமும், அதனை உண்ணும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. அதிலும் இறால் மீனை கடலில் பிடித்து வந்த சூட்டோடு பிரியாணி சமைத்து சாப்பிடுவது மிகவும் ருசியாகவும், புதுமையான அனுபவமாகவும் இருக்கும். இங்கே வீடியோவில் இறால் பிடித்து வரும் மீனவர், அதனை உடனே பிரியாணியாக சமைத்து அசத்துகிறார் பாருங்கள. வீடியோ நன்றி; உங்கள் மீனவன் மூக்கையூர்
மீன் உணவுகள் எல்லாமே ருசி மிகுந்தவைதாம். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றை விடவும் மீன் உணவில் அதிக சத்துகள் உள்ளன. இதய நோய் உள்ளவர்கள் கூட மீன் உணவு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவு உண்பது மிகவும் ஆரோக்கியமானது. இங்கே வீடியோவில் அயிலை மீன் வறுவல் செய்கின்றனர். வீடியோ நன்றி; நாகை மீனவன்
மீனை இயற்கையாக காயவைத்து பக்குவப்படுத்தி கடுவாடாக மாற்றப்படுகிறது. கருவாடும் ஒரு சுவை மிகுந்த உணவாகவே பாரம்பரியமாக உண்ணப்பட்டு வருகிறது. மீன்களில் எத்தனை வகை உண்டோ கருவாட்டிலும் அத்தனை வகை இருக்கிறது. நெத்திலி மீன் குழம்பே அலாதி ருசியாக இருக்கும். நெத்திலி கருவாடு குழம்பும் இன்னும் ருசியாக இருக்கும். இங்கே வீடியோவில் நெத்திலி மீன் கருவாடு செய்வது குறித்து விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Kovai Food Square
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார். அப்போது கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் எம்.பி., ஜோதிமணியின் ஏற்பாட்டின் பேரில் வில்லேஜ் குக்கிங் யூ டியூப் வீடியோ சேனலின் சமையல் குழுவில் பங்கேற்று காளான் பிரியாணி சமைக்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் திடீரென களமிறங்கி பிரியாணிக்கான வெங்காய ரைத்தாவை தயாரித்து அசத்தினார். சமையல் குழுவுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் உரையாடினார். இங்கே அந்த வீடியோவை நீங்கள் முழுமையாகப் பார்க்கலாம். வீடியோ நன்றி ; Village Cooking Channel
வெண்டைக்காயில் நார்சத்து அதிகம் உள்ளது. குடல் இயக்கங்கள் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல், வாயுத் தொந்தரவுகள் உள்ளிட்ட ஜீரண பிரச்னைகள் தீர வெண்டைக்காய் உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை அகற்றவும் வெண்டை உதவுகிறது. இத்தகைய சத்துகள் நிறைந்த வெண்டைக்காயை வெண்டைக்காய் மண்டி என வைத்து சாப்பிடலாம். வெண்டைக்காய் மண்டி என்பது செட்டிநாட்டின் உணவு முறை. சாத வகைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் அல்லது வெண்டைக்காய் மண்டியை சோற்றில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம். சுவையான செட்டிநாட்டு ரெசிபியை செய்து காட்டுபவர், ஆரோக்கிய சுவை இணையதளத்தின் ஆசிரியர்பா.கனீஸ்வரி.
இனிப்பு வகைகளில் அல்வாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு. அதில் கோதுமை அல்வா என்றால் இன்னும் கூடுதல் சுவைதான். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தின்பண்டங்களுக்குப் பதில் உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவைக் கொண்டு கோதுமை அல்வா செய்யலாம். இங்கே வீடியோவில் கோதுமை அல்வா எளிமையாக செய்வது பற்றி வீடியோவில் விளக்கம் அளிக்கப்படுகிறது. வீடியோ நன்றி; kurinji. com
அவல் ஒரு சத்துமிக்க உணவு. அவலில் நார் சத்து நிறைய உள்ளது. அவலை வெறுமனே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதில் தேங்காய் துருவி போட்டு, நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையோடு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். இங்கே அவல் லட்டு, அவல் வடை செய்வது பற்றி இந்த வீடியோவில் விளக்கம் அளிக்கின்றனர். வீடியோ நன்றி; Pebbles Tamil
இந்தியாவில் ஒவ்வொரு நகருக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் தகுந்தவாறு உணவு வகைகள் உள்ளன. இந்திய பாரம்பர்யத்தில் உணவுக்கு என தனிச்சிறப்பான இடம் உண்டு. தென்னிந்திய உணவு வகைகளுக்கு என்று இந்தியாவில் உணவு ரசிகர்கள் உள்ளனர். மசாலாப் பொருட்களுடன் அறுசுவை உணவுகள் தென்னிந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. அதிலும் ஆந்திரா உணவு என்றால் கேட்கவே வேண்டியதில்லை. காரம், சுவை இரண்டிலும் அலாதி ருசி கொண்டது ஆந்திர உணவுகள். இந்த வீடியோவில் ஐதராபாத் முட்டை மசாலா கிரேவி செய்வது குறித்து விளக்குகின்றனர். இந்த கிரேவியை புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம். அருமையாக இருக்கும். வீடியோ நன்றி; Food Area Tamil