ஆரோக்கிய சுவை அக்டோபர் 26 தலைப்பு செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு எளிய தீர்வு
டெங்கு காய்ச்சல் காரணமாக உடல் வெப்பம் அதிகரிக்கும். 102 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காய்ச்சலின் தீவிரம் இருக்கக் கூடும். டெங்கு காய்ச்சலால் உடலில் தட்டணுக்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே ர த்த த்தில் உடனடியாக தட்டணுக்களை அதிகரிக்கக் கூடிய உணவுப்பொருட்களை சாப்பிடுவது அவசியம். அதன்படி மாதுளை, கிவி பழம், ப ப்பாளி இலை, உலர் திராட்சை, கோதுமை புல் ஆகியவற்றை உண்ணலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணம் பெற முடியும்.
கெட்டுப்போன பலகாரங்கள் விற்க கூடாது
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி பலகாரத்தை தயாரிக்கும்போது உரிய உணவு பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். பல உணவகங்கள் மற்றும் இனிப்புக் கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read:அக்டோபர் 26 இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
உடலுக்கு தீங்கு விளைவுக்கு ரசாயனங்களை சேர்த்து பலகாரங்கள் தயாரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. நீண்டநாட்கள் பலகாரத்தை விற்பனைக்கு வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். பலகாரம் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் அதில் உள்ள பொருட்கள் பற்றி பாக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். எனவே பலகாரங்கள் வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆவின் இனிப்புகளை வாங்குங்கள்…
தமிழ்நாடு போக்குவரத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஆண்டுதோறும் இனிப்பு, பலகாரங்கள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இனிப்பு வாங்குவதற்காக போக்குவரத்துத்துறையில் டெண்டர் விடப்பட்டது. இதில் சில விதிமீறல்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அனைத்து துறை மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கும்போது ஆவின் நிறுவனத்தில் இருந்து இனிப்புகள் கொள்முதல் செய்யும்படி கூறியுள்ளார். இதன் மூலம் அரசு துறை வளர்ச்சி பெறும் என்றும், விதிமீறல் தவிர்க்கப்படும் என்றும் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
கேஎப்சியை புறகணக்கும்படி கன்னடர்கள் கோரிக்கை
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சர்வதேச உணவு பிராண்ட் நிறுவனமான கேஎப்சியின் கடை ஒன்றில் இந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கன்னட பாடல்கள் போடும்படி கூறியிருக்கிறார்.
Also Read: உறைந்த கெட்டியான தேனை சாப்பிடுவது நல்லதா?
ஆனால், கடையில் இருந்த ஊழியரோ, இந்தி நமது தேசிய மொழி. அதனை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இது குறித்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே போல கேஎஃபிசியை புறக்கணிப்போம் என்ற ஹேஸ்டேக்கும் அதிகரித்து வருகிறது. ஜொமோட்டோ நிறுவனம் தமிழ்நாட்டில் மொழி சர்ச்சையில் சிக்கிய நிலையில் இப்போது கேஎஃப்சியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
உணவு கிடைக்காமல் திண்டாடும் ஆப்கானிஸ்தானியர்கள்…
தலீபான்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான், கடுமையான பொருளாதார நெருக்கடியையும், உணவு தானியங்களின் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு இதுவரை அளித்து வந்த நிதி உதவியை பன்னாட்டு அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளும் நிறுத்தி விட்டதால் அங்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 100 கோடி டாலர்கள் அளவுக்கு நிதி உதவி மற்றும் இதர உதவிகளை அளிக்க, கடந்த மாதம் ஐ.நா.வில் நடந்த கூட்டத்தில் பல்வேறு உலக நாடுகள் உறுதி அளித்தன. ஆனால் இவற்றை தலீபான்கள் மூலம் அனுப்பாமல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நேரடியாக அனுப்ப உலக நாடுகள் விரும்புவதால், இதில் மேலும் சிக்கல்கள் தொடர்கின்றன. என உணவு இன்றி லட்சக்கணக்கானோர் உயிரிழக்கலாம் என ஐநாவின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
-பா.கனீஸ்வரி
#Arokyasuvai #ArokyasuvaiFoodNews #ArokyasuvaiNews
Comments