உறைந்த கெட்டியான தேனை சாப்பிடுவது நல்லதா?


தேனை அதன் இயற்கையான தன்மையில் திரவமாக உண்பது நல்லது என்பது பொதுவான கருத்து. ஆனால், இப்போதைய நவீன உலகில் சிலர் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் தேனை வைத்து உறைந்த பின்னர் அதனை மிட்டாய் போல சாப்பிடுகின்றனர். 

இப்படி ஃப்ரீசரில் வைத்து உறைய வைக்கப்பட்ட தேன் நுகர்வுக்கு ஏற்றதா? என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது. சிலர் குளிர்சாதன பெட்டியில் வைத்து தேனை பாதுகாப்பது வழக்கமான விஷயம், 

Also Read: 30 நாட்கள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி முகாம் நவம்பர் 7ம் தேதி தொடங்குகிறது

ஆனால் சமீபத்தில் உறைந்த தேனை ஒரு மிட்டாய் போல சிலர் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. அது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்பதை இப்போது பார்க்கலாம்

தேனை உறைய வைத்து சாப்பிடுவது நல்லதல்ல

 

டிக்டோக்கில் பரவிய வீடியோ 

உறைந்த தேன் சவால் என ஒரு டிக்டோக் பயனர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த நபர் ஒரு சிலிகான் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தேனை 8-9 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, அது உறைந்த பின்னர் எடுத்து மிட்டாய் போல சாப்பிட்டார்.  இந்த வீடியோவை லட்சகணக்கானோர் பார்த்தனர். ஆயிரகணக்கானோர் பின்னூட்டங்களையும் தெரிவித்தனர். இந்த வீடியோ பரவலாக சில வாதங்களை முன் வைத்துள்ளது. சிலர் தேனை அனுபவிக்க ஒரு சுவையான வழி என்று கூறினர். ஆனால், இப்படி உறைய வைத்த தேனை அதிக அளவு உண்ணும்போது உடலின் செரிமான அமைப்பை பாதிக்கும் என்று கருத்து கூறுகின்றனர். 

உறைந்த தேனை உட்கொள்வது பாதுகாப்பானதா?

குளிர்சாதன பெட்டியில் வைத்து தேனை சேமிப்பது புதிதல்ல, ஆனால் உறைந்த தேனை மிட்டாய் போன்று சாப்பிடுவது நல்லதல்ல. உறைந்த தேனை உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். 

உறைந்த தேனை சாப்பிடுவது பாதுகாப்பானதா?

தேனை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். அசௌகரியத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேனை உறைய வைப்பதால் பழமையான மற்றும் கெட்டுப்போன உணவு காரணமாக  போட்யூலிச(botulism)ம் என்ற  பாக்டீரியா உருவாகக் கூடும் என்றும் அதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 

Also Read: நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாத 5 கடல் உணவுகள்!

உடலில் சர்க்கரை அதிகரிக்கும்

தவிர, அதிக அளவு தேன் சாப்பிடுவதால், சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மேலும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் உறைந்த தேன் பற்களை  பாதிக்கும் மற்றும் பல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே உறைந்த தேனை சாப்பிடும் முன்பு இதையெல்லாம் கருத்தில் கொள்ளுங்கள். 

-ஆகேறன் 

#FrozenHoney  #Honey  #DontEatsFrozenHoney  #SideEffectOfFrozenHoney 


Comments


View More

Leave a Comments