
நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாத 5 கடல் உணவுகள்!
ஆரோக்கியமான கடல் உணவுகள்
இறால், நண்டு உணவுகள்
ருசியாக செய்யும் விதம்
கோலிவாடா இறால்
கொலிவாடா இறால் என்பது உன்னதமான மஹாராஷ்டிரர்களின் சுவையான பாரம்பர்ய கடல் உணவாகும். மசாலா மற்றும் மூலிகைளை அரைத்து இறாலுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இறால்கள் மசாலா கலவையால் தோய்த்து பின்னர் மாவில் தோய்த்து வறுத்து எடுத்து உண்ணவும். சுடச்சுட சாப்பிட்டால் அருமையான சுவையைத் தரும். .
Also Read: பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் இணைந்த ஃப்லேக்கிஸ்
தாப் சிங்ரி
இந்த உன்னதமான பெங்காலி வகை கடல் உணவாகும். இறாலின் மைய நரம்பை நீக்கி விட்டு, தேங்காய், கடுகு கலவை, கொஞ்சம் மசாலா மற்றும் மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த DAAB சிங்ரி சுடசுட சாதத்துடன் சாப்பிடும்போது அற்புதமான அனுபவத்தைத் தரும்.
தேங்காய் இறால் கறி
இந்த உன்னதமான தேங்காய் இறால் கறி செய்ய, முதலில். இறால்களைக் கழுவவும். அடுத்து, ஒரு வாணலியை சூடாக்கி, சிறிது எண்ணெய் சேர்த்து, காய்கறிகளை சேர்க்கவும், சிறிது தேங்காய் பால், மசாலா மற்றும் மூலிகைகள் சேர்க்கவும்.
Also Read: அக்டோபர் 21 இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
கடைசியாக, தண்ணீர், இறால் மற்றும் உப்பு சேர்க்கவும்.வெந்தவுடன் பரிமாறவும். அற்புதமான சுவையை உங்களுக்கு அளிக்கும்.
கடல் நண்டு கறி
கடல் நண்டு கறியை சமைப்பதற்கு சில நிமிடங்கள் போதுமானது. நண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டிய பின் வேகவைக்கவும். அடுத்து, மசாலாவை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும், பின்னர் மசாலா கொதித்தபின்னர், நண்டுகள், காய்கறிகள், மூலிகைகள் சேர்க்கவும். அரிசி சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
முட்டை மற்றும் இறால் கறி
இந்த சுவையான காரமான முட்டை மற்றும் இறால் கறி செய்வது மிகவும் சுலபம். முதலில் முட்டைகளை வேகவைக்கவும், இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து, வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் காய்கறிகளுடன் ஒரு காரமான மசாலாவை கொதிக்க வைக்கவும். இத்துடன் வேகவைத்த முட்டை மற்றும் இறால்களைச் சேர்க்கவும். சூடான முட்டை மற்றும் இறால் கறி ரெடி. சூடாக சாதத்துடன் உண்ணவும்.
-பா.கனீஸ்வரி
#PrawnRecipes #PrawnFoods #SeeFoods #NanduRecipes
Comments