உணவு வீணாவதை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்
உணவு, நீர் போன்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாகி வரும் காலத்தை எட்டியுள்ளோம். பெரும்பாலான மக்கள் உணவுப் பற்றாக்குறையின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும், உலகின் சில பிராந்தியங்களில் உணவுக்கான அணுகல் ஒரு ஆடம்பரமாக மாறியுள்ளது. உணவுப் பற்றாக்குறை ஒரு முக்கியக் கவலையாக உள்ளது. தினசரி உணவு வீணாவதைக் குறைக்க சில எளிய வழிகள் இங்கே.
உணவை காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்:
காற்றோட்டமில்லாத கொள்கலனில் சேமித்து வைத்தால் பழங்கள், ஊறுகாய் போன்ற பெரும்பாலான உணவுகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இந்த கொள்கலன்கள் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்கள் நுழைவதைத் தடுக்கின்றன, எனவே, கெட்டுப்போனதால் உணவை தூக்கியெறிய வேண்டிய அவசியம் குறைகிறது.
உணவை சரியான முறையில் சேமிக்கவும்:
ஒவ்வொரு உணவுப் பொருளின் லேபிளிலும், அந்த பொருளைச் சேமிப்பதற்கான சிறந்த வழி எது என்பதைக் குறிப்பிடும் ஒரு பிரிவு உள்ளது. உதாரணமாக, பாலாடைக்கட்டி (Cheese) குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட வேண்டும். எனவே கெட்டுப்போவதையும் இறுதியில் வீணாவதையும் தவிர்க்க, அறிவுறுத்தலைக் கடைப்பிடித்து குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும்.
உணவை விவேகமாக ஆர்டர் செய்யுங்கள்:
ஒரு உணவகத்தில் உணவருந்தும்போது, பல உணவு வகைகளை ஆர்டர் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வெளியே இருந்தால், உணவு வீணாவதைக் குறைக்க பகிரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்.
தேவையான மளிகை பொருட்களை மட்டும் வாங்கவும்:
வாங்க விரும்பாத ஒரு சில பொருட்களையும் சில சமயங்களில் நாம் வாங்க நேரிடலாம். ஆனால் உணவு வீணாவதைக் குறைக்கும் நோக்கில், உங்களுக்கு உண்மையில் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள்.
இதையும் படியுங்கள்; டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
உண்ணக்கூடிய பகுதிகளை வீச வேண்டாம்:
உண்ணக்கூடிய உணவின் பாகங்களை பலர் அப்புறப்படுத்துவார்கள். எடுத்துக்காட்டு: பழத் தோல்கள், கோழி தோல் மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள், இவை மூன்றும் அதிக சத்தானவை மற்றும் ஆரோக்கியமானவை.
எஞ்சியவற்றை வீச வேண்டாம்:
பெரும்பாலான வீடுகளில் உணவு மீதமாவது பொதுவானதாகும். பெரும்பாலும், அவை குப்பைத் தொட்டியில் எறியப்படுகின்றன. அவற்றை வீசுவதற்குப் பதிலாக, மறுநாள் அவற்றை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு எஞ்சிய கோழியை சூப்பிற்கு பயன்படுத்துதல். அதுபோன்று எஞ்சிய தக்காளியை சாலட் போன்ற பிற உணவுகளில் பயன்படுத்தலாம்.
ஒரேத் தட்டில் உணவைப் பரிமாற வேண்டாம்
விருந்தினர்களுக்கோ அல்லது உங்கள் சொந்த குடும்பத்திற்கோ, தட்டில் உணவை பரிமாறுவதை விட, கொள்கலன்களிலோ அல்லது கிண்ணங்களிலோ வழங்குங்கள். இதன் மூலம் வேண்டிய அளவு உணவை எடுத்துக் கொள்ளலாம். இது உணவு வீணாகும் அபாயத்தை நீக்குகிறது.
நன்கு உறையவைக்கப்பட்ட உணவு:
பலருக்கு இது தெரியாது, ஆனால் காலாவதி தேதியை நெருங்கும் உணவை ஆழமான உறைபனியில் வைப்பது முப்பது நாட்கள் வரை அதை கெடாமல் பாதுகாக்க ஒரு சிறந்த வழியாகும். எனவே, காலாவதியாகும் எந்தவொரு உணவையும் அடுத்த முறை நீங்கள் காணும்போது, அதை நன்றாக உறைய வைத்து பயன்படுத்துங்கள்.
முடிந்தால் உரம் தயாரியுங்கள்:
சிறிய வீடுகளில் வீணான உணவையும் உரமாக்கும் வசதிகள் இப்போது உள்ளன. மீதமாகும் உணவுப் பொருட்களை உரமாக உருவாக்குவது, தாவரங்கள் வளர துணையாக இருக்கும். வீணான உணவுப் பொருட்களை வீட்டுக்கு வெளியே வைத்து உரமாக்க இட வசதி இல்லாமல் போகலாம்.
மாடிகளில் உரமாக மாற்றும் பல அமைப்புகளும் உள்ளன. இதனால் குறைவான இடம் இருந்தாலும் அனைவரும் வீணாகும் உணவு பொருட்களை உரமாக மாற்றுவதற்கான வசதி உள்ளது. பெரிய தோட்டம் கொண்டிருப்போருக்கு உரக்குழி முறை நல்ல பயனைத் தரலாம். வீட்டுத் தாவரங்கள் அல்லது சிறிய தோட்டங்களோடு நகர்புறங்களில் வாழ்வோருக்கும் மாடியில் உரமாக்கும் அமைப்பு முறைகள் உதவலாம்.
காலாவதியாகும் முன் உணவை உட்கொள்ளுங்கள்:
பெரும்பாலான உணவுகள் காலாவதி தேதி கொண்டவை. காலாவதித் தேதிக்கு அப்பால் உணவு தூக்கி எறியப்பட வேண்டும், எனவே உணவு அதன் காலாவதித் தேதியை அடைவதற்கு முன்பு அதை உட்கொள்ள முயற்சிக்கவும்.
மீதியுள்ள உணவை சேமியுங்கள் (அவற்றையும் சாப்பிடுங்கள்):
மீதியான உணவை வீணாக்காமல் இருக்க பல வழிமுறைகள் உள்ளன. நீங்கள் அதிகமாக சமைப்பதால், வழக்கமாகவே உணவுகள் மீதியாகுமானால், குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் அந்த உணவை உண்டு முடிப்பதற்கு ஒரு நாளை ஒதுக்குங்கள். மீதியான உணவை வீணானதாக வீசிவிடுவதை தவிர்க்கும் சிறந்த வழியாக இது இருக்கும். இதனால், உங்கள் நேரமும், பணமும் மிச்சமாகும்.
மதிய உணவை எடுத்து செல்லுங்கள்:
உங்களோடு வேலை செய்பவரோடு மதிய உணவுக்கு வெளியே செல்வது அல்லது உங்களுக்கு பிடித்தமான உணவகத்தில் உணவு உட்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதனால் அதிகம் செலவாகும். உணவை வீணாக்குவதற்கும் இது வழிவகுக்கும். பணத்தை சேமிப்பதற்கு உங்களுக்கான மதிய உணவை நீங்களே எடுத்து வரலாம். காலையில் நேரம் குறைவாக இருக்கும் என்றால், முந்தைய நாள் மீதியானதை கொள்கலனில் சேமித்து குளிர்நிலையில் வைத்து விடவும். இவ்வாறு முன்னரே செய்யப்பட்ட, பிடித்தமான மதிய உணவை நீங்கள் எப்போதும் கொண்டு செல்லலாம்.
-பாஸ்கர் சாய்
#AvoidFoodWaste #Don'tWastFood #FoodWaste #SaveFoods
Comments