மளிகை பொருட்கள் வாங்கும் முன்பு இந்த ஐந்து விஷயங்கள் முக்கியம்


மாதம் தோறும் மளிகைக்கடைக்குப் போவதும், பொருட்கள் வாங்குவதும் நமக்கு ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கிறது. முன் தயாரிப்பு இல்லாமல் மளிகைக்கடைக்குப் போய் கையில் கிடைக்கும் பொருட்களை அள்ளிப்போட்டுக்கொண்டு வரும் போது நம் மாதாந்திர செலவை மீறி பட்ஜெட் சென்று விடக் கூடும். 

சிக்கனம் என்ற பெயரில் முக்கியமான அத்தியாவசியமான பொருட்களை வாங்காமல் விட்டு விடுவதும் உண்டு. இப்படி நேராமல் இருக்க மளிகைக்கடைக்கு போகும் முன்பு சில முன் தயாரிப்புகளை செய்ய வேண்டியது முக்கியம். 

என்ன பொருட்கள் தேவை என்பதை குறிப்பு எழுதுங்கள்

உங்கள் சமையலறையில் பொருட்கள் தீர்ந்த உடன், என்னென்ன பொருட்கள் தீர்ந்து விட்டன என்று உங்கள் டைரியில் அல்லது நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உட்கார்ந்து கொண்டு எந்த பொருட்களை வாங்கலாம் என்று யோசிக்கத் தேவையில்லை. மாதத்திற்கு தேவையான எந்த ஒரு முக்கியமான மளிகை பொருட்களையும் மறந்து விடுவதும் நடக்காது. 

 

மொபைல் செயலியை நிறுவுங்கள் 

பல மணி நேரம் திட்டமிட்டடபின்னரும் மளிகைக்கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, அதை மறந்து விட்டோம் இதை மறந்து விட்டோம் என்று தோன்றும். சரியான பட்டியலைத் தயாரிக்காவிட்டால் இது போன்ற குழப்பங்கள் வரலாம். எனவே, மளிகை பொருட்களை லிஸ்ட் எடுக்கும் ஒரு மொபைல் செயலியை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்யவும். அடுத்த மாதத்திற்கு நீங்கள் வாங்க விரும்பும் பொருளை கூட அந்த செயலியின் நினைவில் நீங்கள் சேமித்து வைக்க முடியும். சரியான நேரத்தில் அந்த செயலி உங்களுக்கு நினைவு படுத்தும். 

மாத பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பொருட்களை வாங்குங்கள் 

மளிகை பொருட்களுக்காக நீங்கள் செலவழிக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி அதை மட்டும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் கடைக்குச் செல்லும்போது உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, கட்டணம் செலுத்தும் செயலிகள் என்று எதையும் எடுத்துச் செல்லாதீர்கள். இதனால் நீங்கள் விரும்பினால் கூட ஒரு குறிப்பிட்ட தொகையை தாண்டி செலவிடுவதை தடுக்க முடியும்.  

ஆஃபர், தள்ளுபடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள் 

ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது பல வகையான தயாரிப்புகளை மலிவான விலையில் தருவதாக விளம்பரம் செய்வார்கள். அவை, ஷாப்பிங் செய்வதற்கான உங்கள் ஆர்வத்தை  தூண்டுவதற்கு வைக்கப்பட்ட தூண்டில் தான் . இது பொதுவாக வாடிக்கையாளர்களை ஈர்க்க பயன்படுகிறது. ஆஃபர் என்ற பெயரில் தேவையற்ற பொருட்களை வாங்கி விடாதீர்கள். 

 

பொருட்களை வாங்கும் முன்பு அவசரப்பட வேண்டாம்

 

மாதாந்திர மளிகைப் பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு முன், ஒரு நொடி யோசியுங்கள். நீங்கள் வாங்கியிருக்கும் அனைத்துப் பொருட்களும் உண்மையில் அந்த மாதத்திற்கு தேவையா என்று இன்னொரு முறை யோசனை செய்யுங்கள். மளிகைப் பொருட்களை வாங்கும்போது அவசரப்படாமல் இறுதி முடிவை எடுக்கவும்.

பா.கனீஸ்வரி


#GroceryList #GrocerySopping #GroceryPurchase #MonthlyGroceryList #HowPrepareGroceryList

 

Comments


View More

Leave a Comments