மூட்டு வலி, முடக்கு வாதம் முழுமையான தகவல்கள் தீர்வுகள்...


மூட்டு வலி, முடக்கு வாதம் 

ஏன் மூட்டுவாதம் ஏற்படுகிறது 

மூட்டுவாத த்துக்கான சிகிச்சை முறைகள் 

முடவாட்டு கிழங்கு சூப் 

முடவாட்டு கிழங்கு கிடைக்கும் இடங்கள்

பாடி ஸ்டிராங்க், பேஸ்மெண்ட் வீக் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலுவை உதாரணம் காட்டும் நகைச்சுவை காட்சி இன்றளவும் நம்மால் ரசிக்கப்படுகிறது. இதனை நகைச்சுவையாக மட்டும் நாம் கருத வேண்டியதில்லை. நமது உடலுக்கு அடித்தளம் போன்றவைதான் கால்களும் அதில் உள்ள மூட்டுகளும். நமது உடலின் எடையை தாங்கக் கூடியவை மூட்டுகள்தான். 

மூட்டுகளின் அவசியம் 

மூட்டுகளோடு இணைந்திருக்கும் எலும்புகள், எலும்பை புடித்திருக்கும் தசை நார்கள் மோன்றவையும் சேர்ந்தது தான் மூட்டு. மூட்டுகளின் ஆரோக்கியத்துக்கு கொலாஜன் என்ற புரதம் முக்கியமாகும். இதில் குறைபாடுஏற்பட்டால்தான் நமக்கு மூட்டு வலி உண்டாகிறது என்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

மூட்டுகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்

கால்களில் மட்டும் மூட்டு அல்ல, கைகளிலும் கையை மடக்கும்போது கை மூட்டுப்பகுதியை நம்மால் அறிய முடியும். தோள்பட்டை மூட்டு, கை மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால்பாத த்தில் உள்ள மூட்டு என மூட்டு பகுதிகள் எங்கெங்கு உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதாவது நம் உடலை இணைப்பதிலும், உடல் நெளிவு, சுளிவாக இயங்குவதற்கும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். 

கால்சியம் குறைபாடு மற்றும்  உடல் பருமன் 

உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மூட்டுகளில் ஏன் வலி உண்டாகிறது மூட்டுகளுக்கு  மூட்டுகளை இயக்கும் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்போது மூட்டுகளில் வலி உண்டாகும். 

இதையும் படியுங்கள்: தேநீர் சுவை பரிமாணத்தின் தொடர்ச்சியில் சாய்வாலா

இன்னொரு காரணம் நமது உடல் பருமன், உடல் பருமன் ஆகும்போது அந்த உடலைத் தாங்குவதற்கு மூட்டுகளுக்கு போதுமான திறன் இருக்காது. துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடல் பருமன் ஆகி மூட்டு வலி அதிகரிக்கிறது. நம் உடலில் இருக்கும் ஹார்மோன்கள் சமச்சீராக இல்லாத து, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் மூட்டு வலி ஏற்படலாம். 

மூட்டு வலியின் எச்சரிக்கைகள் 

நடக்கும் போது திடீரென அசதியாக உணர்தல், மூட்டுகளில் வீக்கம், வலி ஏற்படுதல் ஆகியவை எல்லாம் மூட்டு பாதிக்கப்படப்போகிறது என்பதற்கான அறிகுறிகளாகும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் கால்களை மடக்கி உட்கார முடியாமல் போக க் கூடும்.  

முடக்கு வாதம் 

மூட்டு வலியில் இருந்து முடக்குவாதம் என்பது முற்றிலும் வேறுபட்டதாகும். மனிதர்களை எந்த வேலையும் செய்யவிடாமல் முடக்கிப்போடுவதால்தான் முடக்கு வாதம் என்று பெயர் வந்ததா என்று தெரியவில்லை. ஆனால், இந்த பெயருக்கு ஏற்றபடி முடக்கு வாதம் என்று வந்தால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது உண்மைதான். 

முடக்கு வாதம் என்று வந்தால் எந்த வேலையும் செய்ய முடியாது

முடக்கு வாதம் என்பது வெறுமனே எலும்பு தொடர்பான நோய் மட்டும் அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மூட்டு மற்றும் அதோடு தொடர்புடைய தசைகள், தசைகளை இணைக்கும் திசுக்கள் ஆகியவற்றின் பாதிப்புகளோடும் முடக்கு வாதம் தொடர்புடையதாகும். எனவே முடக்கு வாதம் என்பது மூட்டை மட்டும் பாதிக்கக் கூடிய ஒன்றல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் 

அறிகுறிகள் 

ஆண்களை விடவும், பெண்களைதான் இந்த முடக்கு வாதம் அதிகம் பாதிக்கிறது. இளம் பருவம் முடிந்து நடுத்தர வயதை நெருங்கும்போது முடக்கு வாதம் பெண்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சில அறிகுறிகள் மூலம் இவற்றை தெரிந்து கொள்ளலாம். கை, கால்கள் வீக்கம் ஏற்படக் கூடும். மூட்டும் வீக்கம் அடையலாம். இந்த வீக்கங்களின் தாக்கத்தால் உங்களுக்கு வலி ஏற்படலாம். வலியின் காரணமாக உடல் சோர்வு மற்றும் காய்ச்சலும் ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்: மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம்

இந்த அறிகுறிகள் முடக்கு வாத த்துக்கான காரணிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம். உடனே மருத்துவ ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், முடக்குவாதமானது இதயம், நுரையீரல், கண்கள் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் 

ஆங்கில மருத்துவம் 

மூட்டு வலி, முடக்கு வாதம் இரண்டுக்கும் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சைகள் உண்டு. மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் கால்சியம் சத்து கொண்ட மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்பவேறு சில மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படலாம். உடல் பருமனாக இருந்தால், உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். எலும்பை, தசைகளை வலுவாக்குவதற்கான மருந்துகள் அளிக்கப்படும். 

சித்த மருத்துவம் 

மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு சித்தமருத்துவத்திலும் சிகிச்சைகள் உள்ளன. முடவாட்டு கிழங்கு என்ற மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் கிழங்கு வகையைக் கொண்டு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முடவாட்டு கிழங்கின் தாவரவியல் பெயர், டிரைனேரியா குர்சிபோலியா என்பதாகும். 

முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு

 

பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த இவை,  பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன. இந்த மரங்களின் வேர் கிழங்குதான் முடவாட்டுக்கால் . எனப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் ஆகாயராஜன் என்றும் கற்பமூலிகை என்றும் பெயர் உள்ளது. மலைபகுதிகளில் இதனை முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு என்று சொல்வார்கள். முடவாட்டு கிழங்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்க்கு அற்புதமான சித்த மருத்துவ தீர்வாகும். குறிப்பாக இந்த கிழங்கை சூப் வைத்துக் குடித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். 

●முடவாட்டுக்கால் - 200 கிராம்

●இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன்

●மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்

●கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்)

●தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்)

●சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்

●தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப்

●இலவங்கப்பட்டை - சிறு துண்டு

●பூண்டு - 3 பல்

●உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

 

செய்முறை:

முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதையும் படியுங்கள்: சிறுநீரக பிரச்னைக்கு சித்தமருத்துவம் தந்த அற்புத தீர்வு

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர்விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும்.

முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு  சூப்

 

சூப் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் முடக்குவாதம், மூட்டுவலி பலன் கிடைக்கும்.குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.இது உணவாக எடுத்துகொள்வதால் பக்க விளைவுகள் கிடையாது.இந்த சூப் கடுமையான மூட்டுவலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் சதை இழுத்தல், உடலில் உண்டாகும் வலி,அசதி, தசைபிடிப்பு போன்ற அனைத்துமே சரியாகும்

எங்கு கிடைக்கும்? 

பாஃர்ம் காயின் என்ற அமைப்பின் மொபைல் எண்களில்(9443098724, 9080794783) தொடர்பு கொண்டு முடவாட்டுக்கால் கிழங்கை பெறலாம். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. கொல்லிலை சந்தை(https://www.kollimalaispices.com/) என்ற இணையதளம் மற்றும் Tredyfoods என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டும் கேட்டறியலாம். இது தவிர சதுரகிரி இயற்கை அங்காடியை(9486072414) தொடர்பு கொண்டும் முடவாட்டுக்கால் கிழங்கை பெறலாம். இப்போது கிடைக்கா விட்டாலும் கூட சீசன் காலத்தில் கிடைப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொண்ட தொடர்புகள் மூலம் பெறலாம். 

முடக்குவாதம், மூட்டு வலி நம்மை அண்டாமல் இருக்க உரிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான உடல் உழைப்பு, நல்ல இரவு தூக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். 

தகவல் உதவி; பாஃர்ம் காயின் 

-பா.கனீஸ்வரி 

#JointPain  #JointPainTreatment  #Palsy  #Rheumatism #MutavattuKilankku #HerbalSoup

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


Comments


View More

Leave a Comments