தேநீர் சுவை பரிமாணத்தின் தொடர்ச்சியில் சாய்வாலா


பலநூற்றாண்டுகளாக தொடரும் தேநீர் 

சுவையும், நன்மையும் நிறைந்த தேநீர் 

மன அழுத்தத்தை குறைக்கும் தேநீர் 

தேநீரின் தொடக்கத்துடன் நாளின் புத்துணர்ச்சி 

சாய்வாலா சங்கிலித்தொடர் தேநீர் கடை

ஒரு நாளின் தொடக்கம் என்பது நல்ல தேநீர் ஆக அல்லது ஒரு நல்ல சுவையான காஃபியாக இருப்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது. எனவே வீட்டிலும், வீட்டை விட்டு  வெளியில் செல்லும்போதும் தேநீர் கடை யை தேடுவது நமது வழக்கம். 

தேநீரில் அந்த அளவுக்கு நன்மைகள் உள்ளன. வரலாற்றில் பல  நூற்றாண்டுகளாக தேநீர் உலக மக்களின் உணவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. தேநீரில் உள்ள நன்மைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. தேநீரில் உள்ள முக்கியமான நன்மைகளை மட்டும் இங்கு பார்க்கலாம். 

ஆரோக்கியத்துக்கு தேநீர் 

தேநீரில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உங்களின் வயது முதிர்வை குறைக்க உதவுகிறது. அனைத்து தேயிலைகளிலும் பாலிபினால்கள் உள்ளன. எனவே தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. 

மன அழுத்தத்தைக் குறைக்கும் தேநீர்

தேயிலை, காஃபி இரண்டிலுமே காஃபின் என்ற பொருள் உள்ளது. ஆனால், இது காஃபியில் அதிக அளவு உள்ளது. காஃபின் அதிக அளவு எடுத்துக் கொள்வதால் சிலருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்படக் கூடும். ஆனால் தேயிலையில் காஃபின் மிதமான அளவில் உள்ளது. எனவே அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இரவு தூக்கத்தை கெடுக்காது. 

இதையும் படியுங்கள்:மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம்


மன அழுத்ததை குறைக்கும் தேநீர் 

தேயிலையில் மன அமைதி தரும் பொருட்கள் உள்ளன. குறிப்பாக நாம் பிளாக் டீ குடிப்பதால், மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் தேயிலையில் இருக்கின்றன. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் இரத்த கட்டிகளை குறைக்க தேநீர் உதவுகிறது. குறிப்பாக பிளாக் டீ எனப்படும் பால் கலக்காத தேநீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. 

தேநீரின் சுவை 

நம் வீட்டை விட்டு தெருவில் இறங்கினாலே தெருவுக்கு மூன்று தேநீர் கடைகளைப் பார்க்க முடியும். ஒவ்வொரு தேநீர் கடையும் ஏதோ ஒரு வகையில் சிறப்பான சுவையை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை தேநீர் கடை வந்தாலும் அந்த கடைகளில் தேநீர் குடிக்க கூட்டம் அலை மோதத்தான் செய்கிறது. 

அதீத நன்மைகளைத் தரும் தேநீர்

கொரோனா பெருந்தொற்று காரணமாக தேநீர் கடையுடனான நமது உறவில் அவ்வப்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது. அந்த தருணங்களில் பார்சல் தேநீர்தான் நமது கவலையை தீர்த்தது. சுறுசுறுப்பை அளித்தது. சாய்வாலா போன்ற டிஜிட்டல் காலத்து சங்கிலித்தொடர் தேநீர் கடைகள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

சாய்வாலா தொடக்கம் 

சென்னையை பூர்வீகமாக கொண்டு சாய்வாலா சங்கிலி தொடர் தேநீர் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் செளகார்பேட்டையில் முதல் கடையைத் தொடங்கியது. இதன் நிறுவனர் விதுர் மகேஸ்வரி. வணிக மேலாண்மை படித்துள்ள இவர், செளகார் பேட்டையில் முதன் முதலில் சாய்வாலா தொடங்கிய போது முதல் ஒருவாரம் எல்லோருக்கும் இலவசமாக சுவையான தேநீர் வழங்கினார். வாடிக்கையாளர்களிடம் சுவை எப்படி இருக்கிறது என்று கேட்டு அவர்கள் சொன்ன திருத்தங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வளர்ந்தது சாய்வாலா. 

இதையும் படியுங்கள்:நெல்லை இருட்டுக்கடை அல்வா… பாரம்பர்யமாக தொடரும் இனிப்பின் சுவை…


சாய்வாலாவின் இரண்டாவது கடை அண்ணா நகரில் அதே 2018ம்ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. 800 ச.அடி இடத்தில் 25 இருக்கைகளுடன் தொடங்கப்பட்டது. அறிமுக சலுகையாக தேநீர் விலையில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. தொடக்கம் முதலே சாய்வாலாவின் சுவைக்கு பெரும்பாலானோர் அடிமையாகி விட்டனர். அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. 

கொடிகட்டிப் பறக்கும் சாய்வாலா

 

பல்வேறு சுவைகளில் தேநீர் 

12 வகையான தேநீர் எட்டு வகையான மில்க்ஷேக் சாய்வாலாவில் கிடைக்கிறது. தேநீரையே 100 மில்லி, 180 மில்லி, 250 மில்லி என்று மூன்று அளவுகளில் விற்கின்றனர். தேநீரில் சர்க்கரை தவிர, தேன் தேநீர், நாட்டு சர்க்கரை தேநீர், இஞ்சி தேநீர், எலுமிச்சை தேநீர் வித விதமான கலவைகளில் ருசிகளில் தேநீர் விற்பனை செய்து அசத்துகின்றனர். 

கடையில் தேநீர் விற்பது மட்டுமின்றி, மினி பிளாஸ்கில் பார்சலில் தேநீர் விற்பனை செய்கின்றனர். பார்சலில் 250 மில்லி, 500 மில்லி என்ற அளவுகளில் தேநீர் கிடைக்கிறது. கடையில் என்ன சூட்டுடன் தேநீர் பிளாஸ்கில் ஊற்றப்பட்டதோ அதே சூடும் சுவையும் வாடிக்கையாளரிடம் போய் சேரும் வகையில் நீடித்திருக்கும் பிளாஸ்கை பார்சலுக்கு உபயோகிக்கின்றனர். ஒரு மணி நேரம் வரை சூடு குறையாமல் இருக்கும் என்று சொல்கின்றனர். 

நொறுக்குத் தீனிகளும் கிடைக்கும்

பாரம்பர்ய மண் கோப்பைகளில் பாரம்பர்யமான சுலைமானி தேநீர் சாய்வாலாவின் சிறப்புகளில் ஒன்றாகும். தேநீரோடு சேர்த்து மேகி, சாண்ட்விட்ச் போன்ற நொறுக்கு தீனிகளையும் விற்கின்றனர். பஃப்ஸ், பன், பிரட், சமோசா ஆகிய நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடமுடியும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முழுக்க, முழுக்க ஆன்லைன் வர்த்தகத்தில் சாய்வாலா கொடிகட்டிப்பறக்கிறது. 

சாய்வாலா சிஇஓ விதுர் மகேஸ்வரி

தேநீருக்கான தேயிலை பவுடரை நேரடியாக அசாம் தேயிலை தோட்டங்களில் இருந்து வாங்கப்படுகிறது. இப்போது சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளன. அடுத்ததாக இதர பெருநகரங்களிலும் சாய்வாலா கிளைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இதற்காக முதலீடு திரட்டும் பணியில் உரிமையார் விதுர் மகேஸ்வரி ஈடுபட்டுள்ளார். 

நயனின் முதலீடு 

நடிகை நயன்தாரா, அவரது நண்பர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இப்போது சாய்வாலாவில் முதலீடு செய்துள்ளனர். இப்போது ரூ.5 கோடி அளவிலான முதலீடுகளை விதுர் மகேஸ்வரி திரட்டி உள்ளார். இந்த நிதியில் 80 சதவிகிதத்தை மேலும் கிளைகள் தொடங்குவதற்காக செலவிட உள்ளனர். மீதி தொகையை சந்தைப்படுத்தலுக்கும், மேலும் சில திட்டங்களுக்கும் செலவிட உள்ளதாக விதுர் மகேஸ்வரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.  

-பா.கனீஸ்வரி 

#Tea #Chai #BlackTea  #HealthyChai  #Chaiwala 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 


Comments


View More

Leave a Comments