பங்குனி விடை பெற்று விட்டது. சித்திரை பிறந்து விட்டது..மாதங்களிலேயே சித்திரை மாதம்தான் சம்சாரிகளுக்கு மிகவும் முக்கியமான மாதமாகும்.ஏனெனில் இந்த சித்திரை மாதக் கோடையில்தான் எல்லா சம்சாரிகளும் தங்கள் நிலங்களைப் பக்குவப்படுத்துவார்கள்.
தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.அதன்படி இந்த திட்டத்துக்கு 65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளின் இணையதளத்தில் வெளியான வேளாண்மை குறித்த செய்திகளின் தொகுப்பு இந்த பகுதியில் தொடர்ந்து இடம் பெறும்.
தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் 20ம் தேதி தாக்கல் செய்தார். இது குறித்து தமிழ் ஊடகங்களில் வெளியாகி உள்ள கருத்துகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
நெற்பயிரிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நெல்தரிசில் பயறு வகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பராமரிப்பு உள்ள நிலமாக இருந்தாலும் சரி அல்லது மானாவாரி மேட்டு நிலம் ஆயினும் சரி மரக்கன்றுகள் வைக்க நாங்கள் தேர்ந்தெடுப்பது அதிகம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதமே.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்தது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் பல புதிய வேளாண் பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டில் புதிய ரக மருத்துவ காளான்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உணவு ஆதாரமாகத்திகழும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் போதுமான பாசன தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தன்னை ஒரு விவசாயி என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி அவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் முதல் முழுநேர விவசாயியாக மாறினார் என்று கூறப்படுகிறது.
வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் விதை, பை, உரம், ஆகியவை மானிய விலையில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
வேளாண்மை பயின்ற இளைஞா்கள் தொழில்முனைவோர் ஆவதற்கு மானியம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசின் அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்னவிதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
டிஜிட்டல் யுகத்தின் வேகத்துக்கு இணையாக பரபரவென்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த பரபர வாழ்க்கையில் நாம் இழப்பது சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைத்தான். நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை சரியான சமநிலையில் உணவின் மூலம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்
தொன்மையான தாவரமான தர்ப்பை வளரும் இடங்களில் மிதமான குளிர்ச்சியைத் தருவதுடன் மன அமைதியையும் தரும். மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி மண்பானையில் போட்டு வைத்துக் குடித்தால் வெயிலின் தாக்கம் குறையும்.