“நான் ஏன் விவசாயி ஆனேன்..” தோனியின் வேளாண் ஆர்வம்


உலகம் வெப்பமயமாதல், வாழ்க்கை முறையில் மாறுபாடு, தொற்று நோய் அபாயங்கள் ஆகியவை குறித்து கடந்த சில ஆண்டுகளாக  விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எனவே, பூமியை காக்கவும், உடல்நலன் பேணவும் விவசாயம் ஒன்றே வழி என்பதை பலரும் உணரத்தொடங்கி இருக்கின்றனர்.

 பல முக்கிய பிரமுகர்கள் கோடி, கோடியாக சம்பாதிக்கும் தொழில்முனைவோராக இருந்தாலும் கூட விவசாயி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 குறிப்பாக பிரபல கிரிக்கெட் வீரர்  எம்.எஸ். தோனி  தன்னை ஒரு விவசாயி என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.  ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி அவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் முதல் முழுநேர விவசாயியாக மாறினார் என்று கூறப்படுகிறது.

Must Read: வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராஞ்சியில் தனது குடும்பத்துக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் விவசாயம் செய்வதில்தான் அவரது ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

திடீரென விவசாயி ஆனதற்கான காரணம் என்ன? என்பது குறித்து  அண்மையில் ஒரு வீடியோ நேர்காணலில் தோனி விளக்கமாக கூறியிருக்கிறார்.

வீடியோவில் தோனி பேசுகையில்,  “பயிர்கள் விளைவிப்பதில் இருந்த ஆர்வம் மற்றும் கொரோனா தொற்று பரவிய காலத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆகியவை என்னை விவசாயம் செய்ய தூண்டியது.

எம்.எஸ்.தோனியின் விவசாய ஆர்வம்

எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் முதலில் 4 முதல் 5 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தோம். 2020 ஆம் ஆண்டு கோவிட் சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விவசாயத்தை மேலும் விரிவாக்கும் யோசனை வந்தது. முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன்.

பயிரை வளர்க்கும் செயல்முறை என்னை மிகவும் கவர்ந்தது. எனது நிலத்தில் வெண்டைக் காய் பயிர் செய்திருந்தேன். வெண்டைகாயை  இரவில் பார்த்தபோது அளவில் சிறியதாக இருந்தது.

 ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால் அது முழு அளவில் வளர்ந்திருந்தது. இது போல காய்கறிகளின் வளர்ச்சியை தினமும் உற்றுக் கவனிக்கும்போது அதன் இயற்கையான செயல்பாடுகள் என்னை ஈர்த்தன. இது போன்ற உற்பத்தி நிகழ்வுகள் என்னை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மேலும் உற்சாகப்படுத்தியது,” என தோனி தெரிவித்தார்.

 #msdhoni #msdhonispeechaboutagri #msdhoninewavatar 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments