சுவையான இயற்கையான பானகம்



மிகவும், சுவையான இயற்கையான எளிமையான பானகம்.. நமது முன்னோர்கள் கோடைகாலத்தில் அவர்களுக்கு குளிர்ச்சியான பாணமாக இருந்தது #பானகம்தான். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இந்த பானகம் லேசான புளிப்பு, இனிப்பு,காரம் என்று கலந்துகட்டிய சுவையில் இருக்கும். இந்த பானகத்தில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும், உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் பனைவெல்லத்திலிருந்தும் கிடைக்கும். இந்த பணத்தை குடிப்பதன் மூலம் நமது உடலில் உள்ள பல நோய்கள் குணமாகிறது. 
மருத்துவப் பயன்:
தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியை தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.உணவு குழாயில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, உணவு செரிமானத்தை அளிக்கிறது. இது உடலில் வெப்பத்தின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது வாதம்,பித்தம்,இரத்தநோய், மயக்கம், வாந்தி, தாகம், காய்ச்சல், முதலியவற்றைப்போக்கும்.பானகம் செய்வது எப்படி என்று பார்ப்போம். 
தேவையானவை
புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
பனைவெல்லம் அல்லது நாட்டுவெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கூடுதல் சுவைக்கு : வாழைப்பழம், மாம்பழம், எலுமிச்சை, தனியா, தயிர், தக்காளி. இவைகளில் ஏதேனும் ஒன்று தேவையான அளவு. 
செய்முறை
முதலில் வெல்லத்தை தட்டி பொடியாக்கிக் கொள்ள வேண்டும். புளியை 2 கப்  தண்ணீரில் நன்கு கரைத்து,அந்த புளி தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிட வேண்டும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டிகொள்ள வேண்டும். இதனுடன் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்க வேண்டும் பிறகு.புதிய மண்பானையில் சேகரிக்க வேண்டும்.   இப்பொது சுவையான பாணம் தயார். பானகத்தை #கோடையில் நாம் குடித்து வந்தால், உடலில் எந்த நோய்களும் ஏற்படாமல், உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து கொள்வதற்கும் இது உதவுகிறது


Comments


View More

Leave a Comments