கம்பத்தில் பசியோடு இருப்போருக்கு அன்னமிடும் கைகள்…

இந்த சமூகத்தில் யாரும் அற்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுநகரங்களில் கூட இப்போது யாருமற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது ஊரடங்கில் தவித்தவர்களுக்கு உணவு வழங்கும் திருநங்கையர்

சவுந்தர்யா கோபி எனும் திருநங்கை தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிகிறார். வார விடுமுறை நாட்களில் வட சென்னையில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த திருநக்கையர் ஏழுபேரும் உடன் இணைந்திருக்கின்றனர்.

எளியோர் உணவு உண்ண தாராளமா உதவுங்கள்

பணம் என்பது பிரதானம் இல்லை என்ற உண்மை பலருக்கத் தெரியவந்தது இந்த கொரோனா காலத்தில்தான். ஊரடங்கு காலம் மட்டுமின்றி எந்த நேரமும் பசியோடும், பட்டினியோடும் சாலையோரத்திலும், மேம்பாலங்களுக்கு அடியிலும் ஏதும் அற்றோர் வாழ்கின்றனர்.

152 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் பசியை போக்கும் நெருப்பு

பசியை போக்கும் பணியை 1867ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வடலூரில் வள்ளலார் தொடங்கி வைத்தாதர். இப்போது 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரும் பணி, பசியை போக்கும் பணி வடலூர் சத்திய தரும சாலையில் தொடந்து வருகிறது. வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மூட்டிய அடுப்பின் நெருப்பு இன்றளவும் அணையாமல் எரிகிறது.

அட்சய திருதியைல ஆரம்பிச்ச அட்சய பாத்திரம் நிறைவாக தொடர்கிறது

ஒரு வருசமாச்சு சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சு..அட்சய திருதியைல ஆரம்பிச்ச அட்சய பாத்திரம் நிறைவாகவே... பசிக்கு டீச்சர் என்று சொன்ன குழந்தையோட வார்த்தை தான் இதோ இப்ப வரை ஓட வைச்சிருக்கு...

புதுகோட்டை கோவில் பக்தர்களுக்கு பார்சல் அன்னதானம்

மனிதன் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளில் முதன்மையானது உணவு. ஆனால், இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்குமான சரிசம மான உணவு அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இயல் உணவின் அளவிடமுடியாத அன்பு பணி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஓசூரிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்கு, குடும்பத்தால் அனாதையாக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுத்து வருகிறது இயல் உணவு. இயல் உணவின் அறப்பணி தினந்தோறும் தடையின்றி தொடர்ந்து வருகிறது.

மதுரை சுரபி அறக்கட்டளையின் அன்னதானம்

தெருக்களில், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்கி வருகிறது மதுரையில் உள்ள சுரபி அறக்கட்டளை நிறுவனம்.