இயல் உணவின் அளவிடமுடியாத அன்பு பணி


 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஓசூரிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்கு, குடும்பத்தால் அனாதையாக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுத்து வருகிறது இயல் உணவு. இயல் உணவின் அறப்பணி தினந்தோறும் தடையின்றி தொடர்ந்து வருகிறது. இயல் உணவின் முகநூல் வழியே தொடர்பு கொள்ளும் ஆதரவு கரங்கள் தினந்தோறும் உணவுக்கான செலவை ஏற்றுக் கொள்கின்றன.

பெருந்தொற்று காலகட்டத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இயல் உணவு ஆதரவற்றவர்களுக்கு உதவிகளை அளித்து வருகிறது. இந்த நான்கு மாதங்கள் இயல் உணவின் ஆதரவால் பலரின் பசி போக்கப்பட்டுள்ளது. வயிறு நிறையப்பெற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். இயல் உணவின் பணிகள் தொடர நாம் வாழ்த்துகின்றோம்.

இயல் உணவுக்கு ஆதரவு அளிக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மனுஷ வாசம்...

நீர்க் கரைக்கு இறங்கி வந்த

காகங்கள் குளித்து முடித்துக்

கூட்டங் கூட்டமாய்ப் பறந்து செல்லும்

வானில் கருமேகங்கள் திரண்டு மறிக்கும்

மழையில் நனைந்த காகங்கள்

மரக்கிளைகள், மாடிச்சுவர், தந்திக் கம்பிகளில் எல்லாம் ஒடுங்கி அமர்ந்து. அனைத்தையும் நினைத்துப் பார்த்து முடிக்கும்; எனினும் மீண்டும்... மீண்டும்...

கானகத்தில்

கொஞ்சமும் எதிர்பாரா வேளையில்

திடீரென்று காட்சியளிக்கும்

மனுஷ வாசம்...

இயல் உணவு.

தானத்தில் சிறந்த அன்னதானம்.

அனு முரளிதரன்.

9840123515.