152 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் பசியை போக்கும் நெருப்பு


பசிதான் இந்த உலகத்தின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக இருக்கிறது. பசியா வரம் வேண்டும் என்று பலரும் கேட்கின்றனர்.  ஆனால், அந்த வரம் மட்டும் யாருக்கும் கிடைப்பதில்லை. தினமும் ஒரு வேளையாவது சாப்பிட்டால்தான் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.

பசியை போக்கும் பணியை 1867ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வடலூரில் வள்ளலார் தொடங்கி வைத்தாதர். இப்போது 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரும் பணி, பசியை போக்கும் பணி வடலூர் சத்திய தரும சாலையில் தொடந்து வருகிறது. வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்பு  மூட்டிய அடுப்பின் நெருப்பு இன்றளவும் அணையாமல் எரிகிறது. இதுவரை கோடிக்கணக்கானோர் சத்திய தரும சாலையில் பசியாறி சென்றிருக்கின்றனர். இன்னும் பசி ஆறி வருகின்றனர். நீங்களும், நானும் இல்லாமல் போனால் கூட இன்னும் பல நூற்றாண்டுகள் வள்ளலார் மூட்டிய அடுப்பின் நெருப்பு அணையாமல் அவரின் வழிவழி சீடர்களால் பாதுகாக்கப்படும் என்பது உண்மை.

இந்த கொரோனா காலகட்டத்தில் ஊரே அடங்கி கிடக்கும் நிலையில் ஏழைஎளியவர்கள் பசிக்காக உணவுக்காக ஏங்கித் துடிக்கின்றனர்.ஏழைகளின், ஆதரவற்றோர்களின் பசியைப் போக்க பலரின் நேசக்கரங்கள் நீள்கின்றன. வள்ளலார் தொடங்கிய சத்திய தருமசாலை இந்த கொரோனா காலகட்டத்திலும் தினமும்  நூற்றுக்கணக்கானோரின் பசியை தீர்த்து வருகிறது.

தினமும் 600 பேர் வரை இங்கு சாப்பிட்டு பசியாறி செல்கின்றனர். கொரோனா காரணமாக உணவகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பலர் இங்கேயே த ங்கி தருமசாலையில் உணவு உண்டு பசியாறி வருகின்றனர். ஊரடங்கால் சில கோயில்களில் அன்னதானம் நிறுத்தப்பட்ட போதிலும் தருமசாலையில் பசி போக்கும் பணி எப்போதும் போல் தொடர்கிறது.

வள்ளலார் தருமசாலைக்கு பல்வேறு தரப்பினர் தரும் நன்கொடைகளாலேயே அணையா நெருப்பை தொடர்ந்து எரிக்க முடிகிறது. வடலூரை சுற்றி உள்ள விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை முடிந்ததும் நெல் மூட்டைகளில் சிலவற்றை தருமசாலைக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

 

வள்ளலாரின் அரும் பணியில் உங்கள் பங்களிப்பும் இடம் பெறலாம். பணமாக நீங்கள் நன்கொடை தர விரும்பினால்,

கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பணம் அனுப்ப வேண்டும்.

Funds accepted in the form of 'Demand Draft', 'Cheque' and 'Money Order' to "VALLALAR DHEIVA NILAYAM, Vadalur"

ADDRESS : THIRUARUTPRAKASA VALLALAR DHEIVA NILAYAM, Vadalur-607303, Cuddalore-District.

BANK ACCOUNT DETAILS

A/c Name : Vallalar Deiva Nilayam,Vadalur

A/c No :028101000000232

Bank : Indian Overseas Bank

Branch : Vadalur

Branch Code :0281

IFSC Code : IOBA0000281 (5th,6th,7th & 8th character is zero)

தவிர இங்கு உள்ள தாணிய உண்டியலில் நெல், பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை முடிந்தவர்கள் போட்டு விட்டுச் செல்கின்றனர். தருமசாலையில் எப்போதுமே ஆறுமாதங்களுக்கான உணவு தாணியங்கள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். எனவே எத்தகைய பேரிடர் வந்தாலும் வள்ளலார் மூட்டிய நெருப்பை அணையாமல் அவர்களால் காக்க முடிகிறது.

வள்ளலார் மூட்டிய நெருப்பு  நம் ஒவ்வொருவர் மனதிலும் எழவேண்டிய நெருப்பு. ஆம் ஏழையை கண்டு இரங்குவதையும், அவர்களின் பசியை   போக்க அன்னதானம் வழங்குவதும் நம் பழக்கங்களில் ஒன்றாக மாற வேண்டும். இந்த கொரான கால நெருக்கடி காலகட்டத்தில் அது அத்தியாவசியமானதும் கூட.

- பா.கனீஸ்வரி

 #ThiruArutprakasaVallalar  #Vallalar #Vadalur  #SathyaDharmaSalai