முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவை வழங்கவேண்டும். ஆனால், ஆர்வக்கோளாறு மிகுதியால், அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா போன்றவற்றை முதியோருக்கு அன்னதானமாக கொடுக்கின்றனர்
மொச்சைக்கொட்டை குழம்பு இட்லி தோசைக்கும் மிகப் பிரமாதமாக இருக்கும்! சூடான பருப்பு சாதத்திற்கும் மோர் குழம்பு சாதத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்!
பழங்குடியினருக்கான சித்த மருத்துவ நடமாடும் குழு மூலம் ஏலகிரி அத்தனாவூர் கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் பயணம் தொடங்கியது. தொடர்ந்து நிலாவூர் கிராமத்திலும் நடைபெற்றது.
கோடைவெயிலின் காரணமாக வெப்பம் அதிகரிப்பதால் உடலில் நீர் சத்து குறைவு போன்ற உடல்நலக்கோளாறுகள் நேரிட வாய்ப்பு உண்டு. உடலில் நீர் சத்தை இழக்கச் செய்யும் உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மேலும் அதிக காரத்தன்மை வாய்ந்த உணவுகளையும் தவிர்ப்பது உடல்நலத்துக்கு சிறந்ததாகும்.
கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவின் மூலம் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். வெப்பமான காலநிலையில், வியர்வை மூலம் நம் உடலில் உள்ள நீர் சத்து ஆற்றலான எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறுகிறது. எனவே, கோடைகாலத்தில் நாம் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவு உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் தளம் டெல்லி மற்றும் லக்னோவில் தெரு உணவு விற்பனையாளர்களை தமது தளத்தில் பரிசோதனை அடிப்படையில் இணைக்க உள்ளது.
ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து உணவு டெலிவரிக்காக 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.150 கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் தொழில்துறை சாயமான ரோடமைன்-பியின் தடயங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது.
ஆரோக்கிய சுவை இணைய இதழ் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தொடங்கப்பட்டது. உடல்நலத்தின் அவசியத்தையும், ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியசுவை செயல்பட்டு வருகிறது.
உணவகமாய் திறந்து அதற்கான மெனக்கெடல்களை விட கொஞ்சம் சுலபமானது க்ளவுட் கிச்சன் தான். அப்படியான க்ளவுட் கிச்சன் எத்தனையோ ஆரம்பித்தாலும் நிலைத்து நிற்பது கிடையாது.
நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக கடந்த 500 நாட்களாக தினமும் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான வெஜிடபிள் பிரியாணி ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகரம் எங்கும் மணிக்கணக்காக அலைந்து திரியும் ஸ்விக்கி, சொமாட்டோ, கொரியர் சர்வீஸ் செய்யும் நபர்கள், தொழிலாளர்கள் இங்கு உணவு உண்கின்றனர்.
மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியல் என்பது தரைப்பகுதியில் வாழும் மக்களிடம் இருந்து மிகவும் வேறுபட்டதாகும். அவர்களின் பல்வேறு நடைமுறைகள் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு உதாரணமாக திகழ்கின்றன. அண்மையில் முகநூலில் வைரலான கொல்லிமலையில் நடைபெற்ற ஒரு திருமண விழா விருந்து குறித்த தகவல்களை இங்கே பதிவு செய்கின்றோம்.