1.8 கி.மீக்கு ரூ.150 டெலிவரி கட்டணம் வாங்கிய ஸ்விக்கி
ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து உணவு டெலிவரிக்காக 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.150 கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பதிவர் ஸ்வாதி முகுந்த் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், இனிமேல் உணவு தேவைகளுக்காக ஸ்விக்கியை ஒருபோதும் நம்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.
அண்மையில் ஸ்விக்கியில் ஒரு உணவகத்தில் கேக் ஒன்றை ஆர்டர் செய்த தாகவும், குறிப்பிட்ட டெலிவரி நேரம் கடந்தும் அந்த கேக் டெலிவரி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் டெலிவரிக்காக 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.150 கட்டணம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வாதி முகுந்த் இதனை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை டேக் செய்து வீடியோவாக பதிவிட்டு இருந்தார். இது போன்று தாமதமான டெலிவரி என்பது தமக்கும், தமக்கு தெரிந்த இன்னும் சிலருக்கும் நேரிட்டுள்ளதாகவும் ஸ்வாதி முகுந்த் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
Must Read: 200 உணவகங்களில் விதிமீறல் குறித்து அதிகாரிகள் ஆய்வு
இதனை ஸ்விக்கியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. உணவை உரிய நேரத்தில் டெலிவரி செய்வது என்பது ஸ்விக்கியின் மெனுவில் இல்லை என்றும் கிண்டலாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த பதிவு வைரல் ஆனது. ஸ்விக்கி நிறுவனம் தரப்பில் ஸ்வாதி முகுந்துக்கு பதில் அளிக்கப்பட்டது. ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட நபர், இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காது என்று உறுதி அளித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்களிடம் முறைப்படி நடந்து கொள்ளும்படி தங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் சொல்லி இருக்கின்றனர்.
ஸ்வாதி முகுந்தின் பதிவிற்கு பின்னூட்டம் இட்ட பலரும் ஸ்விக்கியுடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். அதில் ஒருவர், தாம் உணவு ஆர்டர் செய்து ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகும் உணவு வரவில்லை என்றும், அதன் பின்னர் ஸ்விக்கி தரப்பில் இருந்து எந்த ஒரு காரணமும் சொல்லாமல் அந்த உணவை கேன்சல் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
தங்களுக்கும் இது போல பலமுறை நடந்திருப்பதாக பலரும் ஸ்வாதி முகுந்தின் பதிவிக்கு பின்னூட்டம் அளித்துள்ளனர்.
-பா.கனீஸ்வரி
ContentCreator, DeliveryAppWoes, Food delivery app, Swiggy, SwiggyScam
ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More