200 உணவகங்களில் விதிமீறல் குறித்து அதிகாரிகள் ஆய்வு


சென்னையில் சேகரிக்கப்பட்ட உணவு  மாதிரிகளில் தொழில்துறை சாயமான ரோடமைன்-பியின் தடயங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது. 

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். உணவுப் பொருட்களுக்கு செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். 

உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் குழுக்கள் சென்னை முழுவதும் உள்ள 200 உணவகங்களில் ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Must Read: நன்கு வெந்த சிக்கன் பீஸ்களோடு மணக்கும் பிரியாணி

ரோடமைன்-பி செயற்கை நிறமூட்டியாக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்படுவதை சரிபார்க்க, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

 

அதிகாரிகள் ஆய்வு

“திங்கட்கிழமை, எங்கள் குழுவினர் பல்வேறு உணவகங்களில் சோதனைகளை நடத்தி, ஆய்வுக்காக உணவு மாதிரிகளை தோராயமாக எடுத்து வந்துள்ளனர்.. காலிஃபிளவர் மஞ்சூரியன், சிக்கன் 65, கிரில் சிக்கன், ரோஸ் மில்க் போன்ற வண்ணங்கள் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

மொத்தம் 19 குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை, 214 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 25 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவர் கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட அளவில் அங்கீகரிக்கபட்ட செயற்கை வண்ணங்களை உணவில் பயன்படுத்த வேண்டும்.  ஆனால் சில சமயங்களில், விதிமுறைகள் மீறப்பட்டு, பாதுகாப்பற்ற வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரோடமைன்-பி நிறமூட்டும் வண்ணமாகப் பயன்படுத்தப்படக்கூடாது, என்றார். 

உணவுப் பொருட்களில் கலரிங் ஏஜெண்டுகளைப் பயன்படுத்துவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் உள்ளன. அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, என்றார்.

-பசுமை சுந்தர் 

#cottencandy  #fssai  #fssairaid

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

 

Comments


View More

Leave a Comments