உலக கதை சொல்லல் தினமான மார்ச் - 19 மற்றும் உலக காடுகள் தினமான மார்ச் - 21 ஆகியவற்றை முன்னிட்டு மார்ச்- 23,24(2024)- சனி & ஞாயிற்றுக் கிழமை - இரண்டு நாள் சூழலியல் சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூழல் எழுத்தாளர் திரு.நக்கீரன் அவர்கள் எழுதிய உயிரைக் குடிக்கும் புட்டி நீர் என்ற புத்தகம் குறித்து திரு.செளந்தர் எழுதியிருக்கும் விமர்சனத்தின் தொகுப்பு.
தென்தீபகற்ப பகுதியின் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் வேளாண்மை, குடிநீர் போன்ற தேவைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
விவசாய நண்பர்கள் பயிரிட்ட வேளாண்மையை காப்பாற்ற மழையை எதிர்பார்த்து தவமாய் தவம் இருக்கிறாங்க. அது பாலக்காடு மாவட்டம்தான் என்றில்லை தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான பரிதவிப்பு தான்.
2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெருமழை கொடுத்த அனுபவங்களில் நாம் இன்னும் பாடம் கற்கவில்லை. அந்த வரலாறு இந்த ஆண்டு மீண்டும் திரும்புகிறது என்பதைத்தான் கடந்த சில மாதங்களாக பருவமழை குறைவு என்ற செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.