உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பேருயிர்களுக்காக ஒரு நாள் பயணம்…

யானைகளின் வாழிட்டத்தினை பாதுகாக்க இப்போதிருந்தே முயற்சிகள் எடுப்போமா? என்ற ஒரு பயண வழி கற்றலுக்காக காடறிதல் பயணம் வரும் ஆகஸ்ட் மாதம் 19,20, ( சனி & ஞாயிற்றுக் கிழமை) ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் நடைபெற உள்ளது. விவரம் அறிய கட்டுரைக்குள் பயணியுங்கள்

“பெரும் நுகர்வை குறைத்துக் கொள்ள முயற்சிப்போம்…”

சென்னை புனித தாமஸ் கல்லூரி வணிகவியல் துறை மாணவர்களுடன் அண்மையில் 4 நாட்கள் தினசரி 3 வகுப்புகளுக்களில் சூழலியல் வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் இயற்கை வேளாண் விவசாயி திரு. இரா. வெற்றிமாறன் உரையாற்றினார்.

தலையில் பொடுகு போன்ற அரிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை...

பள்ளி செல்லும் சிறுமிக்கு தலையில் பொடுகு போன்று ஆரம்பித்திருக்கிறது. நாளடைவில், செதில் செதிலாக உறிய தொடங்கியதும் நமைச்சல் எடுப்பதாகச் சொன்னார் அந்த சிறுமியின் தாயார். அவருக்கு நான் பாரம்பர்ய சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்கினேன்.

மதுரை, கரூரில் நடைபெற உள்ள இயற்கை வழி வேளாண் பயிற்சிகள்…

மதுரையில் செஞ்சோலை நடத்தும் இயற்கைவழி வேளாண்மை நேரடிக் களப்பயிற்சி வரும் 30ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

நீங்கள் 30 வயதை கடந்த பெண் என்றால் உங்களுக்குத்தான் இந்த செய்தி....

தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதனைகள் செய்யப்படப்பட உள்ளன.

இன்றைய இயற்கை வேளாண் பொருள் சந்தை

விவசாயிகள் விளைவிக்கும் இயற்கை வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் இந்த பகுதியில் கட்டணம் இன்றி அவர்களின் பொருட்களின் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியிடப்படுகிறது. இன்றைய தகவலில் காட்டு நெல்லிக்காய், ஆரோக்கியமான லட்டு வகைகள் குறித்தவை இடம் பெற்றுள்ளன.

“பரிவட்டச் சோறு” சாப்பிட்ட அனுபவம் உண்டா?

சுடு சோற்றில் நெய் விட்டு அதில் சாம்பார் ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் எல்லா சாம்பாருமே ருசியானதாக இருந்திட முடியாது! சாம்பாரின் தரம், பக்குவமான தயாரிப்பு, நேர்த்தியான சமையல் முறை இவை எல்லாம் தான் ஒரு அற்புதச் சாம்பாருக்கு அடிப்படை தேவைகளாகும்.

“குழம்பு இட்லியில் ஊறியிருக்க, தக்காளி, நல்லெண்ணெய் மணம் அபாரம்…”

குக்கிராமம். பெயரே வித்யாசமாய் இருக்க அண்ணாநகரில் இருக்கிறது என்றார்கள்.இடம் ஒரு சின்ன பார்க் போல இருந்தது. ஒரு பழைய பில்டிங்கில் உள்ளே ஆர்கானிக் பொருட்களின் ஸ்டோராகவும், வெளியே உணவகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் பூண்டு வெறுக்கப்படுவது ஏன்?

வெள்ளைப்பூண்டின் மகிமை எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பூண்டு சாப்பிட்டு அதன் பலனை உணர்ந்து பார்த்தவன் என்ற முறையிலும், நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டது என்ற வகையிலும் இந்தப் பதிவை எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.

ஆடிப்பட்டத்தை அமர்களமாய் தொடங்க அக்ரி இன்டெக்ஸ் 2023

அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் பாரம்பரிய விதைகளைக் கொண்ட அரங்குகள் நிறைய காட்சிப்படுத்தப் படுவது வழக்கம். தேவையான அரிதான நாட்டு காய்கறி விதைகளை அந்த அரங்குகளில் வாங்கலாம்.

நெல்லை சந்திரவிலாஸ் உணவகத்தில் தொடரும் அதே பாரம்பர்ய சுவை….

திருநெல்வேலி ஜங்ஷன் சாலைகுமரன் கோவிலருகே உள்ள சந்திரவிலாஸ் ஓட்டலில் அண்மையில் சாப்பிடச் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடனையே , பழங்காலத்து மேஜை -பழங்காலத்து இருக்கைகள்- கை கழுவும் இடம்- பழங்காலத்து சர்வர்கள் - என்று 80 ஆண்டுகளின் பழமை மாறாமல் அப்படியே வைத்திருப்பதை காணமுடிந்தது.

தமிழ்நாட்டில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் தொடக்கம்…

தமிழக அளவில் முதல் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.