மதுரை, கரூரில் நடைபெற உள்ள இயற்கை வழி வேளாண் பயிற்சிகள்…


மதுரையில் செஞ்சோலை  நடத்தும் இயற்கைவழி வேளாண்மை நேரடிக் களப்பயிற்சி வரும் 30ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 

பயிற்சியில்,  மண்-வளப்படுத்துதல், மேட்டுப்பாத்தி அமைத்தல் & பராரித்தல், காய்கறி & கீரை சாகுபடி நுட்பங்கள், கால்நடை பராமரிப்பு,இயற்கை பயிர் ஊக்கிகள் தயாரிப்பு ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. 

மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம், சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்தும் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் விரிவாக விளக்கம் அளிக்க உள்ளார்.  

மதுரையில் இயற்கை வேளாண்பயிற்சி

4.5 ஏக்கரில் "நம்ம மருதம்" இயற்கை பண்ணையை உருவாக்கி,காய்கறிகள், கீரை, மஞ்சள் , செங்கரும்பு, மாந்தோப்பு, பழக்காடு, கால்நடைகள், பண்ணைக் குட்டை, பண்ணை வீடு என இயற்கையோடு இயைந்து தமிழ்ச்செல்வன் வாழ்ந்து வருகிறார்.

Must Read: நீங்கள் 30 வயதை கடந்த பெண் என்றால் உங்களுக்குத்தான் இந்த செய்தி....

கட்டணமில்லாத பயிற்சியில் மதிய உணவு & ஏற்பாடு செலவுகளைப் பகிர்ந்து கொள்வோம். முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய 94458 61186 அல்லது 9942080100 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

நம்ம மருதம் இயற்கை வேளாண் பண்ணை, 1/259, பூஞ்சுத்தி கிராமம்,மேலூர் தாலுக்கா,மதுரை.( மதுரை அரசு தோட்டக்கலைப் பண்ணை_அருகில்) என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடத்துக்கான கூகுள் வரைபட இணைப்பு; https://maps.app.goo.gl/XqiC8uJiNCGJm7mh7

பயிற்சி மற்றும் அனுபவப்பகிர்வு

வானகம் “ நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்” நம்மாழ்வார் ஐயாவோடு பயணம் செய்த முன்னோடி உழவர்களையும், அவர்களின் அனுபவங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. 

வரும் 29, 2023ம் தேதி ஒருநாள் மரபுநெல் ரகங்களில் பகுதிக்கும், பருவத்துக்குமேற்ற விதை தேர்வு தொடங்கி, விதைப்புமுறை, பராமரிப்பு , அறுவடை, மதிப்புக்கூட்டுதல், விற்பனை, சமைக்கும் முறைகள், மருத்துவத்தன்மைகள் வரை பல தகவல்களை அறிந்துகொள்ள பயிற்சி மற்றும் அனுபவப்பகிர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கைவழி வேளாண் பயிற்சி முகாம்

நம்மாழ்வார் ஐயாவோடு கடந்த 2007ம் ஆண்டில் இணைந்து இயற்கை வழி வேளாண்மை & மரபு விதை மீட்புப் பணிகளைத் தொடங்கியவரும் முன்னோடி உழவருமான கருப்பம்புலம் நெல் சிவாஜி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.

Must Read: இன்றைய இயற்கை வேளாண் பொருள் சந்தை

சித்தமருத்துவர் & இயற்கை வழி உழவர் திரு.சரவணகுமரன் அவர்களும் , நெல். சிவரஞ்சனி (2022ம் ஆண்டுக்கான (முதலமைச்சர் மாநிலஇளைஞர்விருது பெற்றவர்.) ஆகியோரும் பயிற்சிகள் வழங்குகின்றனர். 

வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர்,கரூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 500/- மட்டும் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் திருப்பி தரப்படாது. பயிற்சியின்போது மூலிகை தேநீர், உணவு வழங்கப்படும்.குறிப்பு : ஜூலை 30ம் தேதி வானகத்தில் நடைபெறும் களப்பணியில் பங்கேற்கலாம். 

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation

Account No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch,

Karur (Dt) , TamilNadu

முன்பதிவு அவசியம்.  முன்பதிவுக்கு +91 86680 98492 அல்லது +91 86680 98495 ஏதேனும் ஒரு மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இது தவிர +91 94458 79292 (whatsapp) என்ற எண்ணில் தகவல்களை பதிவு செய்யலாம். வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org என்ற இணையதள இணைப்பை சொடுக்கவும். 

 #organicagritrainingcamps #agricultureonedaytraining #agritraining 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments