நீங்கள் 30 வயதை கடந்த பெண் என்றால் உங்களுக்குத்தான் இந்த செய்தி....


தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதனைகள் செய்யப்படப்பட உள்ளன. இந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மருதுவத்துறை சார்பில் கூறப்படுகிறது.

30 வயதைக் கடந்த பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

Must Read: 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருப்பைவாய் பரிசோதனை செய்வது அவசியம்…

அதன்படி இந்த திட்டமானது சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 4 மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 வயது கடந்த பெண்களுக்கு கேன்சர் பரிசோதனை

இது தொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழுக்கு பேட்டியளித்த பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம்  மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் அளிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அறிவுறுத்தலின் படி பரிசோதனை மேற்கொள்ள முன்வருவோருக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற்றுநோய் பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக செவிலியர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

#tngovthealthdepartment  #camcerscreeningfortnwomen #cancertreatment

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments