தலையில் பொடுகு போன்ற அரிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை...


பள்ளி செல்லும்  சிறுமிக்கு தலையில் பொடுகு போன்று ஆரம்பித்திருக்கிறது. நாளடைவில், செதில் செதிலாக உறிய தொடங்கியதும் நமைச்சல் எடுப்பதாகச் சொன்னார் அந்த சிறுமியின் தாயார்.

இதனால் பல நாள் தூக்கமில்லை என்று சொன்னவர் மிகவும் வருத்தப்பட்டு பேசினார். “வளர்ற பிள்ளைங்க... ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கா... “என்று அவரும் மனம் நொந்து பேசினார்.

Must Read: நீங்கள் 30 வயதை கடந்த பெண் என்றால் உங்களுக்குத்தான் இந்த செய்தி....

முதலில் வயிறு சுத்தம் செய்யச் சொன்னேன். அதன்பிறகு ஒருவேளை உணவாக பழங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னேன். நிறைய நீர் அருந்தச் சொன்னேன். அசைவம் மற்றும் எண்ணெய்ப் பலகாரங்களை தவிர்க்குமாறு சொன்னேன்.

வேப்பிலை உள்ளிட்ட சில மூலிகைகளுடன் மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து நீர் விட்டு மண் சட்டியில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கச் சொன்னேன். தலைக்கு ஷாம்பு போடுவதைத் தவிர்த்து சீயக்காய், அரப்பு தேய்த்து குளிக்கச் சொன்னேன். வாழை இலையில் உணவு உண்ணச் சொன்னேன்.

பொடுகு போன்று அரிப்புக்கு பாரம்பர்ய சிகிச்சை

ஏறக்குறைய ஒரு மாத சிகிச்சைக்குப்பிறகு பொடுகு, நமைச்சலுடன் முடி உதிர்ந்து போன இடத்தில் இப்போது புதிதாக முடி முளைக்குமளவு முன்னேற்றம் இருப்பதாக சொன்னார் அந்தப் பெண்மணி. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், நான் சொன்னவற்றை நம்பிக்கையுடன் விடாமல் செய்ததால் அந்த சிறுமிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

இதுபோன்று பல்வேறு உடல் ரீதியான தொந்தரவுகளில் உழல்வோருக்கு இன்னும் பல முயற்சிகளில் ஆலோசனை மற்றும் உடல் நலத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன்.  

Must Read: “பரிவட்டச் சோறு” சாப்பிட்ட அனுபவம் உண்டா?

மூட்டு வலிக்கு புற்றுமண்ணுடன் சில மூலிகைகளைக் கலந்து பூசியதில் நல்ல குணம் கிடைத்திருக்கிறது. எண்ணெய் தடவல், மூலிகை ஒத்தடம், மூலிகை நீர் ஒத்தடம் மற்றும் மூலிகை கலந்த புற்றுமண் பற்று சிகிச்சையை வீடுகளுக்குச் சென்று கொடுத்து வருகிறேன்.

இந்த சிகிச்சை ஆலோசனைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது என அனுபவப்பூர்வமாக உணர்ந்தோர் என்னிடம் தெரிவிக்கின்றனர். பாரம்பரிய மருத்துவத்தில் அடுத்த முன்னேற்றம். நம்பிக்கை மற்றும் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் பலன் கிடைக்கும்.

- எம்.மரிய பெல்சின், 9551486617

#dandrufflikeitchy  #curedandruffl  #itchyinhead #traditionaltreatments

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments