“ஆரோக்கிய சுவை அங்காடி”தொடக்கம்; இயற்கை வேளாண் பொருட்கள், புத்தகங்கள் ஒரே தளத்தில் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தைத் தொடர்ந்து ஆரோக்கிய சுவை அங்காடி என்ற இ-வணிக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கொரோனா திரிபு; இணை நோயர்களுக்கு எச்சரிக்கை தேவை…

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வகையின், திரிபான ஒமிக்ரான் ARCTRUS XBB 1.16 பெரும்பாலும் upper airways எனப்படும் சுவாச மண்டலத்தின் மேல் பகுதியையே பாதிக்கிறது. தீவிர நுரையீரல் தொற்றை ஏற்படுத்துவதில்லை.

ப்ராஸ்டேட் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டியது முக்கியம்…

ஆண்களுக்கு அவர்களது நாற்பதுகளின் பிற்பகுதியில் இருந்து சிறுநீர்ப்பைக்கு வெளிப்புறம் சிறுநீர் செல்லும் பாதையான யூரித்ராவுக்கு வெளியே "ப்ராஸ்டேட்" எனும் சுரப்பி வீக்கம் காண ஆரம்பிக்கிறது. இதற்கு தீர்வு காண என்ன செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

லேட்டஸ்ட் வேளாண்மை, உணவு செய்திகள்….

அக்ரிசக்தியின் “சிறுதானியங்கள் சிறப்பிதழ்” குறித்த தகவல்கள், ஆந்திராவில் நடைபெற உள்ள விவசாய வேத பாடசாலா தொடக்க விழா குறித்த செய்தி, திருப்பதி திருமலையில் இயற்கை பொருட்களால் ஆன லட்டு தயாரிக்க முடிவு குறித்த செய்தி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கோழி கறியை வித விதமான ருசியில் வழங்கும் உணவகம்

நண்பர் கார்த்திக் கடையோட நாட்டுக்கோழி சுவையை பத்தி பலரும் பாராட்டிட்டாங்க அதனாலயே என்னமோ நம்ம நாக்கும் அந்த ருசியை தேடியது. ருசி எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள கட்டுரையை படிக்கவும்.

வார இறுதியில் நடைபெறும் 2 ஆரோக்கிய பயிற்சிகளை மறவாதீர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வள்ளுவம் வேளாண் பண்ணையில் வரும் 22, 23 ஆம் தேதிகளில் அங்குபஞ்சர் பயிற்சியும், திருப்பூர் மாவட்டம் அலகுமலை அருகில் உள்ள மெளனம் பாடசாலையில் நடைபெற உள்ள வாழ்வியல் பயிற்சிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.

ஆற்காடு மக்கன்பேடாவை சுவைக்க மறக்காதீர்கள்

மக்கன் பேடா கிட்டத்தட்ட பாதுஷா போலவே இருக்கும் நன்கு ஜீராவில் மூழ்கி இருக்கும். எங்கள் கடை ஸ்வீட் ஸ்டாலில் நடிகர் நாகேஷின் முகம் போல அம்மைத் தழும்பு தாங்கி மொர மொரப்பாய் ஜீராவில் ஊறி சுவைக்க அருமையாக இருக்கும்! நான் சொன்னது வட இந்திய ஸ்டைல் மக்கன் பேடா! ஆற்காடு மக்கன் பேடா வேறு.!

கோவையில் 9ஆம் தேதி நடைபெறும் சந்தை உள்ளிட்ட 3 நிகழ்வுகளை மறக்காதீர்

கோவையில் வரும் 9ஆம் தேதி இயற்கை வேளாண் சந்தை நடைபெற உள்ளது. இது தவிர செஞ்சோலை அமைப்பின் சார்பில் சிறுதானிய சிற்றுண்டி செய்முறை பயிற்சி, பிஸ்கெட் தயாரிப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. விவரங்கள் அறிய கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

தாம்பரத்தில் நாளை கோடை கால இயற்கை சிற்றுண்டி பயிற்சி

சென்னை தாம்பரம் பகுதியில் வரும் 02 ஆம் தேதி ஞாயிறு அன்று வள்ளுவம் இயற்கை விளைபொருள் சந்தை திருவிழா, கோடை கால இயற்கை சிற்றுண்டி , சுவை பானம் தயாரிக்கும் பயிற்சி ஆகியவை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுவை மிக்க உணவகங்கள்…

சுடச்சுட...எடுப்பு சாப்பாடு...பொரித்த பெரிய மீன்...மீன்குழம்பு, கருவாட்டு குழம்பு, நண்டு, சிக்கன், மட்டன் குழம்புகள், ரசம், அப்பளம்..இவை எல்லாமே ரூ.70/-க்கு கோவையில் கிடைக்கிறது. எங்கே என்பதை தெரிந்துகொள்ள திரு.கா.சு.வேலாயுதன் அவர்களின் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

உடற்கட்டமைப்புக்கான குறுக்கு வழி ஸ்டீராய்டுகள் ஆபத்தானவை

பாடி பில்டிங் போட்டிக்காக அதீத பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சேரும் போது சிறுநீரகங்கள் இரண்டு முழுவதும் செயலிழந்து விட்டது தெரிந்திருக்கிறது. மரணமும் சம்பவித்திருக்கிறது. மரணத்திற்கான காரணமாக அவர் அளவுக்கு அதிகமாக பாதகம் விளைவிக்கும் அளவு ஸ்டீராய்டு மருந்துகளை உட் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கோவையில் மற்றுமொரு பசி போக்கும் உணவுப்புரட்சி

கோவை RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு முழு சைவச் சாப்பாடு தருகிறார்கள்.