தாம்பரத்தில் நாளை கோடை கால இயற்கை சிற்றுண்டி பயிற்சி
சென்னை தாம்பரம் பகுதியில் வரும் 02 ஆம் தேதி ஞாயிறு அன்று வள்ளுவம் இயற்கை விளைபொருள் சந்தை திருவிழா, கோடை கால இயற்கை சிற்றுண்டி , சுவை பானம் தயாரிக்கும் பயிற்சி ஆகியவை நடைபெற உள்ளது.
தாம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பேபி உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. வள்ளுவம் இயற்கை சந்தையில் - தூய இயற்கை உணவுகள் இடம் பெறுகின்றன. குறிப்பாக காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் இடம் பெறுகின்றன.
Must Read: தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுவை மிக்க உணவகங்கள்…
இதுதவிர சமையல் மண்பாண்டங்கள் - துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள் - பனை ஓலை பொருட்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் ஆகியவையும் இடம் பெறும். இயற்கை சார்ந்த பொருட்களின் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களுமாக ஒருங்கிணைந்த ஆர்கானிக் விற்பனை சந்தையில் சந்திப்போம் .
பாரம்பரிய அரிசி வகைகள் / பருப்பு வகைகள் / சீர்தானியங்கள் / தூய செக்கு எண்ணெய்கள் / மசால் வகைகள் / மாவு - பொடி வகைகள் / மலைத்தேன் / மரபு திண்பண்டங்கள் / மரபு விளையாட்டு பொருட்கள் / மண்பாண்ட பொருட்கள் / நாட்டு விதைகள் / இயற்கையில் மதிப்புக்கூட்டு பண்டங்கள் அனைத்தும் கிடைக்கும் . மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்: வெற்றிமாறன் இரா - வள்ளுவம் இயற்கை சந்தை. அவர்களை 7448558447 / 9566667708 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்விடத்தின் முகவரி; பேபி உயர்நிலை பள்ளி, தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் பின்புறம், முத்துலிங்கம் வீதி புது மார்க்கெட் , தாம்பரம் T- காவல் நிலையம் எதிரில் , தாம்பரம் நிகழ்விடத்துக்கான கூகுள் வரைபடம் இணைப்பு;https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA
திருக்கழுக்குன்றம் அருகே நம்மாழ்வார் 85 வது பிறந்தநாள் விழா!.
இயற்கை வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழா வரும் 6ஆம் தேதியன்று தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காடு, புதிய இடையூர் (கடம்பாடி), திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம். என்ற முகவரியில் காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது.

திரு வீ தமிழ்மணி ச ம மே உ, தமிழ் நிலம் திராவிடப் பண்ணை உணவுக்காடு. அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் :திரு மயில் கிருட்டிணன், உணவுக்காடு, வளவந்தாங்கல் வரவேற்புரை ஆற்றுகிறார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் பல்வேறு வேளாண் அறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். தமிழ்நாடு வேளாண் காடுகளின் கூட்டமைப்பு நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. நிகழ்வின் போது மண்வாசனை மேனகா அவர்களின் கை மணத்தில் சிறுதானிய பகல் உணவு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 93400 47779, 98410 91025, 94441 87579 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
#nammalvarbirthday #summerfoodtraning #organicfarming
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, நம்மாழ்வார் பிறந்தநாள், ரூ.30க்குமுழுசாப்பாடு
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More