“ஆரோக்கிய சுவை அங்காடி”தொடக்கம்; இயற்கை வேளாண் பொருட்கள், புத்தகங்கள் ஒரே தளத்தில் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தைத் தொடர்ந்து ஆரோக்கிய சுவை அங்காடி என்ற இ-வணிக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆரோக்கிய சுவை என்ற இணையதளத்தை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கினோம். வேளாண்மை, உடல்நலம், உணவு ஆகிய நோக்கத்தைக் கொண்டு இன்றளவும் தடம் மாறாமல் இந்த இணையதளம் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
Must Read: கொரோனா திரிபு; இணை நோயர்களுக்கு எச்சரிக்கை தேவை…
ஆரோக்கிய சுவை இணையதளத்தில் வெளியிடப்படும் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை மற்றும் விற்பனை பற்றிய செய்திகளில் இயற்கை வேளாண் விவசாயிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தோம்.

இப்போது இயற்கை வேளாண் பொருட்களும், மதிப்புக்கூட்டு பொருட்கள், வேளாண்மை, உடல்நலம், உணவு குறித்த புத்தகங்களும் ஆரோக்கிய சுவை இணையத்தளத்தோடு தொடர்புடைய ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளத்திலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம். இணையதள முகவரி; https://www.arokyasuvaiangadi.com/ . ஆரோக்கிய சுவை இணையதளத்தோடு தொடர்புடைய இயற்கை வேளாண் விவசாயிகளிடம் இருந்தே பொருட்கள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும்.
ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளம் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பாலமாக செயல்படும். இப்போது பட்டியலிடப்பட்ட பொருட்களில் இருந்து தங்களுக்கு விருப்பமான பொருட்களை , புத்தகங்களை வாங்க முடியும். பணம் செலுத்தும் நடைமுறைக்கான தொழில்நுட்ப இணைப்பு தாமதம் ஆவதால் கேஷ் ஆன் டெலிவரி முறையிலும், வங்கி பணப் பரிவர்த்தனை, கூகுள் பே முறையில் மட்டும் பணம் பெற்றுக்கொள்கின்றோம்.
Must Read: ஆற்காடு மக்கன்பேடாவை சுவைக்க மறக்காதீர்கள்
பொருட்களை வாங்கி முடித்த உடன் இணையதளத்தில் உள்ள Customer Support & Payment option என்ற இணைப்பை சுட்டி கூகுள் பே கோட்-ஐ ஸ்கேன் செய்தோ அல்லது அந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கு எண்ணிலோ பணம் செலுத்தலாம்.

என் மனைவி திருமதி. கனீஸ்வரி நிர்வாகத்தில் சக நண்பரும், மூலிகை ஆர்வலருமான திரு.மரிய பெல்சின், சித்த மருத்துவர் திரு. வி.விக்ரம் குமார் ஆகியோர் ஆதரவுடன் இப்போது ஆரோக்கிய சுவை அங்காடியின் இயற்கை வேளாண்பொருட்கள் மற்றும் புத்தக விற்பனை தொடங்கி இருக்கிறது. தினந்தோறும் பொருட்கள் சேர்க்கப்படும். புத்தகங்களும் சேர்க்கப்படும். முதல்கட்டமாக சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படும்.
முகப்பு புகைப்படம் நன்றி; ரம்யா தேவி முகநூல் பக்கம்
#onlineorganicstore #arokyasuvaiangadi #organicproducts
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More