கொரோனா திரிபு; இணை நோயர்களுக்கு எச்சரிக்கை தேவை…


இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வகையின், திரிபான ஒமிக்ரான்  ARCTRUS XBB 1.16 பெரும்பாலும் upper airways எனப்படும் சுவாச மண்டலத்தின் மேல் பகுதியையே பாதிக்கிறது. தீவிர நுரையீரல் தொற்றை ஏற்படுத்துவதில்லை.

முக்கிய அறிகுறிகள்

மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை கரகரப்பு மற்றும் கனைத்து கனைத்து இருமல் ,  தலைவலி மற்றும் ஜுரம் என இந்த அறிகுறிகள் அனைத்துமே காணப்படும். ஐஸ் கிரீம் சாப்பிட்டேன்,லஸ்ஸி குடிச்சேன்,ஜில்லுனு கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சேன்,ஒரே நேரத்துல ரெண்டு இளநீர் குடிச்சேன் . அதனால் சளி புடித்துவிட்டது என்று மக்கள் கேஷுவலாக கூறும் அதுகுறிகளே தென்படும்.

Must Read: ப்ராஸ்டேட் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டியது முக்கியம்…

கூடுதலாக Pink eye கண் சிவந்து, உறுத்தல் ஏற்படுவது இதன் புதிய அறிகுறி. அதனால் இந்த புதிய வகை கொரோனவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. சாதாரணமாக சளி, இருமல், ஜூரதிற்கு சிகிச்சை எடுப்பது போல் , இதற்கும் சிகிச்சை எடுத்தால் போதும். 

சாப்பிட முடியவில்லை, மயக்கமா இருக்கு, LOW BP யா இருக்கு, உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு,ஜுரம் குறைய மாட்டேங்குது என்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, DEHYDRATION ஐ சரி செய்ய IV FLUIDS போட்டுகொள்ளலாம். 

கொரோனா திரிபால் ஆபத்து இல்லை

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துவிட்டு , டெஸ்ட் கார்டில் இரண்டு கோடு வந்தவுடன்  அதை ஃபோட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில்  " எனக்கு கொரோனா வந்துவிட்டது, போன வாரம் என்கூட இருந்தவங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க . Pray for my speedy recovery" என்று  CELEBRITIES போல ஸ்டோரி போட நினைப்பவர்கள், மூக்கில் சுவாப் எடுத்து டெஸ்ட் பரிசோதனை செய்து பார்க்கலாம். 

மற்றபடி, mild symptoms உள்ளவர்களுக்கு டெஸ்ட் அனாவசியம் தான். 60+ வயதிற்கு மேல் உள்ளவர்கள் ,இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய் CANCER, நுரையீரல் பிரச்சனை, கிட்னி பிரச்சனை /  மாற்று அறுவை  சிகிச்சை TRANSPLANT SURGERY  போன்ற தொந்தரவுகள் உள்ளவர்கள் , மூக்கினுள் ஸ்வாப் மூலமாக RT PCR பரிசோதனை செய்து பார்த்து, அடுத்த 15 நாட்களுக்கு  PULSE, BP, SPO2 போன்றவற்றை அடிக்கடி கண்காணிப்பது நல்லது. 

இதை எதிர்கொள்வது எப்படி ?

"தினசரி கொரோனா எண்ணிக்கை 10,000 ஐ கடந்தது, தமிழகத்தில் இது வரை இல்லாத அளவு கொரோனா எண்ணிக்கை  " என்று டிவியில்  செய்திகள் வந்தவுடன், டக்குனு சேனலை மாற்றிவிடுங்கள், அல்லது டிவியை ஆஃப் செய்துவிடுங்கள். தேவையில்லாமல் பீதியோ, பயமோ தேவையில்லை. இந்த புதிய ARCTRUS xbb 1.16 கிருமியை மிக சுலபமாக நாம் கடந்து விடலாம். பல லட்சம் பேரை உயிர் பலி வாங்கிய டெல்டா வகை கொரோனவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. 

டாக்டர். பிரகாஷ் மூர்த்தி எம்பிபிஎஸ்., எம்டி

#Coronastrain #Co-morbiditiescaution #ARCTRUSxbb1.16 

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குதேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments