வார இறுதியில் நடைபெறும் 2 ஆரோக்கிய பயிற்சிகளை மறவாதீர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வள்ளுவம் வேளாண் பண்ணையில் வரும் 22, 23 ஆம் தேதிகளில் அங்குபஞ்சர் பயிற்சியும், திருப்பூர் மாவட்டம் அலகுமலை அருகில் உள்ள மெளனம் பாடசாலையில் நடைபெற உள்ள வாழ்வியல் பயிற்சிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.
அக்குபஞ்சர் பயிற்சி
தாய்வழி மரபு அக்குபஞ்சர் மையம் நடத்தும் 2 நாள் அக்குபஞ்சர் பயிற்சி மையம் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வள்ளுவம் வேளாண் பண்ணையில் நடைபெற உள்ளது.
கப்பிங் தெரபியின் பலன்கள்:
முதுகுதண்டு வலியினை போக்கவல்லது, இடுப்புவலியினை சரி செய்ய உதவும், உடலின் அதிக கொளுப்புசத்தை சமன் செய்யும், மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவும், உடல் பருமனை குறைக்க உதவும், தொந்தியை குறைக்க உதவும். முகம் பொலிவு பெறலாம், முக சுறுக்கங்கள் மறையும்,தோல் நோய்கள் குணமடையும்.

Reflexology யின் பலன்கள்:
உடலின் கழிவுகளை எளிமையாய் வெளியேற்ற உதவும், Stroke, Cancer, Diabetes, Irregular Mensus, ஆஸ்துமா போன்ற தீவிர நோயில் உள்ளவர்களுக்கு side தெரபியாக சிறப்பாய் கழிவு நீக்கத்திற்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவும்.
Must Read:ஆற்காடு மக்கன்பேடாவை சுவைக்க மறக்காதீர்கள்
Moxa:
தீவிர நோய்களை சரி செய்ய உதவும், ஆஸ்துமா போன்ற உடனடி தொந்தரவுகளுக்கு சரி செய்ய உதவம்.
யோகா:
நோய்களை எளிமையாய் வீட்டில் இருந்தவாரே சரி செய்து கொள்ள பெரிதும் உதவுகிறது.
பயிற்சி கட்டணம், தங்கும் இடம், உணவு, புத்தகம், அக்குபஞ்சர் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு கட்டணமாக ரூ.8000 மட்டும் வசூலிக்கப்படும். பயிற்சி குறித்த இதர விவரங்களுக்கு 7448558447 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாழ்வியல் நல பயிற்சி
நமது உடம்பை பற்றிய புரிதல் பொதுவாக யாருக்கும் இருப்பதில்லை. மேலும், எதை உண்ணலாம்? எதை தவிர்க்கலாம்? எவ்வாறு மற்றும் எவ்வளவு? இதில் பல குழப்பங்கள் உள்ளன. கூடுதலாக நவீன வாழ்க்கை முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக பல நோய்கள் உருவாகிக் கொண்டே உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கான தீர்வு முழுமையாக கிடைப்பதில்லை.
ஆனால் நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை எடுத்து கொண்டால் பல உண்மைகள் அதில் பதிந்திருக்கிறது. நமது உடம்பை பற்றியும், உணவு பழக்கங்கள், குளியல் முறை என பல நமக்கு இன்றும் பொருந்தும்.

எந்த மருந்தும் இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கடைபிடித்து நோயில்லாமல் ஆரோக்கியமாக நாம் எப்படி வாழ்வது பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் நமக்கு எடுத்து சொல்ல வருகிறார் நமது சிறப்பு விருந்தினர் ஹீலர் ஜெயசித்ரா அவர்கள்.
பல ஆண்டுகளாக உணவு மற்றும் உடல்நல ஆலோசகராக அனுபவம் பெற்றவர். அவரிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தே இல்லாமல் வாழ்வியலில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் பல நோய்களுக்கு தீர்வும் கண்டவர்.
Must Read: அற்புத பலன்களை தரும் முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்
வாருங்கள்! வரும் ஏப்ரல் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நமது மௌனம் இயற்கை பாடசாலையில் "வாழ்வியல் நல பயிலரங்கம்" ஏற்பாடு செய்துள்ளோம். நன்கொடை: ரூ 600 (மதிய உணவு உட்பட) முன்பதிவு செய்ய @ 8508307617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
பயிற்சி நடைபெறும் இடம்: மௌனம் இயற்கை பாடசாலை, செம்பருத்தி தோட்டம், அலகுமலை அருகில், திருப்பூர்
#healthylifestyle #traditionallifestyle #lifestylechange #healthiswealth #healthyfood #acupuncturetraining
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More