லேட்டஸ்ட் வேளாண்மை, உணவு செய்திகள்….
அக்ரிசக்தியின் “சிறுதானியங்கள் சிறப்பிதழ்”
அக்ரி சக்தியின் இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சிறுதானியங்களின் சிறப்புகள், குதிரைவாலியில் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டு வழிமுறைகள், சிறுதானியங்கள் சாகுபடிக்கு புதிய இரகங்களை பிரபலப்படுத்தும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.
மேலும் கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துகள், சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்த பழுப்புப் புரட்சி அவசியம் – முனைவர் சுரேஷ் பாபு, சிறுதானியப் புரட்சி – காலநிலை மாற்றத்தையும், உணவுப் பஞ்சத்தையும் சமாளிக்குமா? ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

நேட்டிவ் புட் ஸ்டோர், மாப்பிள்ளை செல்வதானியம் சிறுதானிய உணவுகள், திணை ஆர்கானிக்ஸ் வெற்றிக்கதைகள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். தரவிறக்கம் செய்ய:
https://www.vivasayam.org/.../agrisakthi-68-issue.../
http://www.vivasayam.org/.../Agrisakthi-68-millets…
-செய்தி நன்றி; செல்வமுரளி முகநூல் பதிவு
விவசாய வேத பாடசாலா தொடக்க விழா
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்த்ராலயம் பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை(18/04/2023) அன்று விவசாயிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் #RYTHU_VEDA_PATASHALA வின் தொடக்க விழாவில் Dr.Saroja Kumar அம்மாவும் நானும் கலந்து கொள்ளவுள்ளோம்.

நிகழ்வில் 400ற்கும் மேற்பட்ட விவசாயிகள், மந்த்ராலயம் தொகுதி MLA, முன்னாள் MLAக்கள், கிருத்தவம் இஸ்லாம் மற்றும் இந்து மதகுருமார்கள் பத்திரிகையாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் மக்களுக்கு நமது தயாரிப்பில் உருவாகவிருக்கும் கொத்தமல்லிச்சாறு வரவேற்பு பானமாக கொடுக்கப்படவுள்ளது.
Must Read: தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுவை மிக்க உணவகங்கள்…
மற்றுமொரு சிறப்பாக, இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நமது Karur Moringa and Vegetable Farmers Producer Company Ltd. நிறுவனத்தின் தயாரிப்புகளுள் சிலவற்றும் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம்.
-செய்தி நன்றி; கார்த்திக் மேட் முகநூல் பதிவு
இயற்கை விவசாய பொருட்கள் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
Must Read: வார இறுதியில் நடைபெறும் 2 ஆரோக்கிய பயிற்சிகளை மறவாதீர்
திருப்பதி திருமலையில் அண்மையில் நடைபெற்ற அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் லட்டு பிரசாதத்தை இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் திருப்பதி லட்டு இயற்கை முறையில் தயாரிக்கப்பட உள்ளது.
-நாளிதழ் செய்தி
#agrisakthi #Rythuvedapatashaala #thiurpatiladdu

Comments
View More