இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவித்த பொருட்கள் இந்த பகுதியில் சந்தைப்படுத்தப்படுகிறது. விவசாயிகளை தொடர்பு கொள்வதற்கான விவரங்களுடன் வெளியிடப்படும் தகவலால் விவசாயிகள், நுகர்வோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

கொல்லிமலையும் முடவாட்டுக்கால் கிழங்கும்…

மருத்துவர் வி.விக்ரம் குமார் இந்து தமிழ் திசை இதழில் உணவு சுற்றுலா தொடரில் கொல்லிமலை குறித்து எழுதியிருக்கிறார். அவரது கட்டுரையின் ஒரு பத்தியில், ஏற்காடு, கொல்லி மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்றால், 'முடவாட்டுக்கால் சூப் இங்கே கிடைக்கும்' என்று எழுதியிருப்பதை பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆரோக்கிய சுவை அங்காடியில் முதல் 3 ஆர்டர்கள் செய்தவர்களுக்கு நன்றி!

ஆரோக்கிய சுவை அங்காடி கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை எங்களுடைய ஆரோக்கிய சுவை இணையதளத்தில் வெளியிட்டோம். ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளம் தொடங்கி 15 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு ஆர்டர் கூட வராத து கவலையை ஏற்படுத்தியது.

லேட்டஸ்ட் வேளாண், உணவு செய்திகள்….

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன 25 உழவர் சந்தை வளாகங்களில் தொன்மை சார் உணவகம் என்ற உணவகங்கள் அமைக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானகத்தில் உங்கள் குழந்தைகளுக்கான ஒருவாரகால பயிற்சி

வானகத்தில் குழந்தைகளுக்கான ஒருவாரகாலப் பயிற்சியில் மழலைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வியலில் கலந்து களித்திடுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கட்டுரையை படிக்கவும்.

வேளாண் விளை பொருட்களை இணையத்தில் விற்க உதவும் அக்ரிசக்தி

தமிழ்நாட்டை சேர்ந்த திரு.செல்வமுரளி என்ற இளைஞரின் முயற்சியில் உருவான அக்ரி சக்தி அடுத்த பரிணாமத்தை அடைந்திருக்கிறது. அக்ரி சக்தி அங்காடி என புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். விவரம் அறிய கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்

கோடையில் பூக்கும் இந்த பூக்களின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..

வேப்பம்பூவை துவையல், ரசம் செஞ்சு சாப்பிட்டா குமட்டல், வாந்தி, மயக்கம் சரியாகும். வேப்பம்பூவை ஊற வச்சி குடிச்சா பித்தம் விலகும். வேப்பம்பூக்களை மென்று சாப்பிட்டா வாய்வுத்தொல்லை, ஏப்பம், பசியின்மை சரியாகும். வேறு என்ன நன்மைகள் இருக்கின்றன என்று அறிய கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்

128 ரூபாயில் ஆரோக்கிய வாழ்வியலை தெரிந்து கொள்ளுங்கள்

சுத்தமான காற்றை சுவாசிப்பது கூட இயலாததாக மாறி விடும் சூழல் நிலவுகிறது. இயற்கை வாழ்வியலும், ஆரோக்கியமான வாழ்கை முறையும் நமது நோயற்றவாழ்வுக்கு அத்தியாவசிய தேவையாகும். ஆரோக்கிய வாழ்வியலை வலியுறுத்தும் வகையில் வெளி வந்திருக்கிறது நலக்கண்ணாடி என்ற நூல்.

கூட்டு வாழ்வியல் முறையை அறிய திணையூர் இரண்டு நாள் பயிற்சி முகாம்

​கணினி அடிப்படைப் பணிகளில் கடுமையான வேலையிழப்பு தென்படுகிறது. ஒரே நாளில் எழுபதாயிரம் பேர்களை வேலையைவிட்டு அனுப்புகிறார்கள். இந்த சூழலை தவிர்த்து திணை வாழ்வியலில் ஈடுபட செய்தியை முழுமையாகப் படிக்கவும்

மூட்டு வலி தீர இதைவிட சிறந்த கிழங்கு வேறு ஏதும் இல்லை

முடவாட்டுக்கால் கிழங்கை ரசமாக வைத்துக் குடித்தால் முடக்குவாதம், மூட்டுவலி, மூட்டு வீக்கம், கழுத்துவலி, தோள்பட்டை வலி, முதுகுவலி சரியாகும். கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்

கோவையில் வரும் 30ஆம் தேதி கிழங்கு திருவிழா…

கோவையில் பாரம்பரிய கிழங்கு திருவிழா வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்த பட்டத்தில் அறுவடை செய்த பாரம்பரிய கிழங்கு வகைகள், மஞ்சள் ரகங்களைக் கொண்டு ஒரு சின்ன கண்காட்சி மாதிரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோயுற்ற கால்நடைகளின் புகைப்படங்களை தொகுக்க அக்ரி சக்திக்கு கைகொடுங்கள்..

உங்கள் கால்நடைகள் நோயுற்று அவதிப்படுகின்றனவா? வைத்தியம் பாருங்கள். அதற்கு முன்னால் அவற்றை போட்டோ எடுங்கள். முகம், உடல், பின்புறம், நேராக, மேலிருந்து, கீழிருந்து, கிட்டத்தில் இருந்து, சிறிது தூரம் தள்ளி - எப்படியெல்லாம் உங்களால் வளைந்து வளைந்து எடுக்க முடியுமோ எடுங்கள். அதை அக்ரிசக்திக்கு அனுப்புங்கள்.