நோயுற்ற கால்நடைகளின் புகைப்படங்களை தொகுக்க அக்ரி சக்திக்கு கைகொடுங்கள்..


ஆடு மாடுகளுக்கு செல்ஃபி எடுக்கத் தெரியாது. ஆனால் உங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியும் அல்லவா? போதும். அதை வைத்து வித்தை காட்டலாம்.

உங்கள் கால்நடைகள் நோயுற்று அவதிப்படுகின்றனவா? வைத்தியம் பாருங்கள். அதற்கு முன்னால் அவற்றை போட்டோ எடுங்கள்.  முகம், உடல், பின்புறம், நேராக, மேலிருந்து, கீழிருந்து, கிட்டத்தில் இருந்து, சிறிது தூரம் தள்ளி - எப்படியெல்லாம் உங்களால் வளைந்து வளைந்து எடுக்க முடியுமோ எடுங்கள். அதை அக்ரிசக்திக்கு அனுப்புங்கள்.

கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள கீழ்கண்ட இணைப்பில் உள்ள கோ-கால்நடை மேலாண்மை செயலி வழியே உங்கள் கால்நடைகளின் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்புங்கள். https://play.google.com/store/apps/details…  நோயுற்ற கால்நடைகளின் புகைப்படங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் மூலம் நோயின் தீவிரம், அதற்கான முதலுதவிக் குறிப்புகளை வழங்க முடியும்.

Must Read: கோடைகால இயற்கை உணவுகள்; உடல் சூட்டை குறைக்கும் நுங்கு, வெண்பூசணி…

உங்களுக்கே தெரியும். பிறகென்ன? அடுத்த முறை உங்கள் ஆடு மாடுகள் நோயுறும்போது வெறும் புகைப்படம் போதும். என்ன வியாதி, என்ன தீர்வு என்று AI மூலம் கணப் பொழுதில் தெரிந்துகொண்டுவிட முடியும்.

 

கால்நடைகளைக் காக்கும் புதிய முயற்சி

விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் இச்செய்தி பரவ வேண்டும். இதற்கெனவே ஆயத்தமாக உள்ள எங்கள் வல்லுநர் குழுவுடன் நீங்கள் நேரடியாக சாட் செய்யலாம். ஆய்வுக்கு உதவும் மனம் கொண்டோர், அவரவர் வளர்க்கும் ஆடு மாடு கோழி போன்றவற்றின் முகம்,கழுத்து, முழு உடல், வால், கால், பால் மடி ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். எல்லா பெருஞ்செயல்களும் ஒரு சிறு புள்ளியில்தான் தொடங்குகின்றன. இந்தப் புள்ளியைக் கோலமாக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

-அக்ரி சக்தி குழுவினர்

#agriculture #farming #livestock

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குதேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments