கூட்டு வாழ்வியல் முறையை அறிய திணையூர் இரண்டு நாள் பயிற்சி முகாம்
உலகளாவிய பொருளாதாரத் தேக்க நிலையை அண்மையில் நம்மில் பலர் அறிந்து கொண்டிருக்க முடியும். பல நாடுகளில் வங்கிகள் பெரும் வீழ்ச்சியடைகின்றன. கணினி அடிப்படைப் பணிகளில் கடுமையான வேலையிழப்பு தென்படுகிறது. ஒரே நாளில் எழுபதாயிரம் பேர்களை வேலையைவிட்டு அனுப்புகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு என்ற பூதம் போன்ற நுட்பம் பலரது வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கப்போகிறது. அதே நேரம் ஒரு சிலர் கைகளில் பல்லாயிரம் கோடிகள் புரளப்போகிறது. மக்களின் பொருளாதாரம் மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத் தாழ்வுடன் நடைபோடப் போகிறது.
Must Read: மூட்டு வலி தீர இதைவிட சிறந்த கிழங்கு வேறு ஏதும் இல்லை
வளர்ச்சி என்ற பெயரில் நமக்கு உணவு. உடை, உறையுள் என்ற அடிப்படையாதாரங்களைக் தரும் காடு, மலை, கடல், ஆறு, பறவை, விலங்குள், கண்மாய், வயல் என்று யாவற்றையும் சுரண்டி நுகர்ந்து முடித்துவிடும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். இந்தப் போக்கு வெகுவிரையில் சீர்குலைவிற்கு உள்ளாகப் போகிறது. அப்போது நாம் எதை உண்ண முடியும்? எப்படி மூச்சுவிட முடியும்? எப்படி உறவுகளுடன் நட்புகளுடன் உரையாட முடியும்? வெறுமைக்குள் செல்லப் போகிறோமா?

இல்லை இதற்கு மாற்றாக அன்புடன் கூடிய, வளமுடன் கூடிய, இயற்கையுடன் கூடிய இனிய எளிய வாழ்வியலுகுச் செல்ல வேண்டாமா? அதற்கான முன்முயற்சிதான் திணையூர்கள் (Ecovillage) எனப்படும் கருத்தாக்கம்.
இது பற்றி இரண்டு நாள் பயிற்சி .திணையூர் என்றால் என்ன? ஏன் வேண்டும்? அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் யாவை? அதற்கான நிதி. நிர்வாக வளங்களைத் திரட்டுவது எப்படி? மேலாண்மை செய்வது எப்படி?
விளம்பர இணைப்பு; பசு மஞ்சள் கிலோ ரூ.352 மட்டுமே ஆன்லைனில் பெற ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளம்
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளுக்கு பயிற்சி முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கூட்டுப் பண்ணைய திணையூர் - பொதிகைச் சோலை வாழ்வூரை உருவாக்கிய பாமயன் தலைமையிலான குழுவினர் நடத்த உள்ளனர்.சித்திரை தி.ஆ. 2054, சித்திரை 30-31 (2023, மே மாதம் 13-14) சனி/ஞாயிறு ஆகிய நாட்களில் தென்காசி மாவட்டம், தலையணை சாலை, பொதிகைச் சோலை திணை வாழ்வூரில் நடைபெறும்.
போட்டியற்ற கூட்டு வாழ்வு, கூட்டுப் பட்டா முறைகள், நிலத் தேர்வும் அமைப்பும், நிதி திரட்டும் நெறிமுறைகள், பதிவும் சட்டக் கூறுகளும், அடிப்படைக் கட்டுமானங்கள், வேளாண்மை வாழ்வியல் நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் பயிற்சி முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பயில்வோம், செயல்படுத்துவோம். இருபது பேர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. பதிவு செய்யத் தொடர்பெண் - 8072215581.
#ThaniyurTrainingCamp #Collectivelifestyle #naturallife

Comments
View More