உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்காக அரசு சார்பில் ;சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடத்தப்பட்ட வேளாண் வணிக திருவிழா வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பதற்கான மிகச் சிறப்பான முன்னெடுப்பு.
கோவையில் மாணவி ஒருவர் உணவு ஃபுட் பாய்ஸன் ஆகி, உடல் நிலை கெட்டு, பக்கத்தில் இருக்கும் ஒரு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் உடனே மாணவியின் தந்தை, பெரிய ஹாஸ்பிடலில் அனுமதித்துவிட்டார்.
சித்த மருத்துவர் பாஸ்கரன் கோவைக்கு ஒர் அவசர அலுவல் காரணமாக வருகிறார். ஒருநாள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை - 07.07.2023 கோவை வருகிறார்.
பஞ்சாப் உழவர்கள், பச்சைப்பயிறை அறுவடை செய்ய, செடி காயும் வரை காத்திருக்காமல், களைக் கொல்லிகளை உபயோகித்து செடியைக் கொன்று அறுவடையைத் துரிதப்படுத்துகிறார்கள்.
தஞ்சாவூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் எல்லையோர கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மொய் விருந்துகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த பகுதி மக்கள் சொல்கின்றனர்.
கோவையில், செஞ்சோலை நடத்தும் இயற்கை அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 09-07-2023 ஞாயிறு காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பயிற்றுநர் திரு.அகத்தியம்.தீபக் பயிற்சிகள் வழங்க உள்ளார்.
முன்னொரு காலத்தில் தெருக்களில் வீட்டுக்கு வீடு மணியடித்தபடி பால்காரர் வந்து பால் ஊற்றுவது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிலிருக்கிறது? அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணியது போல் இந்த காலத்தில் ஓர் வியாபாரம் அதே சைக்கிளில்.ஆம்,.. வீடு வீடாக இட்லி மாவு தருவது தான்
தக்காளி விலை கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் முக்கிய பேசு பொருளாக ஆகியிருக்கிறது தக்காளி.உச்சகட்டமாக நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்பதாக இருக்கிறது.
காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சியில் காளான் வளர்ப்பு, காளான் குடில் அமைத்தல் , காளான் அறுவடை உள்ளிட்ட பயிற்சி மற்றும் சீரமைப்பு முறைகள், செயல் முறைகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
பாமரனிலிருந்து படித்த மேதாவிகள் வரை யாவரும் அறிந்த ஆனால் பயன்பாட்டை மறந்த கரிசாலைக்கு நிகரான தூதுவளையை பற்றி எடுத்துரைக்க முனைகிறேன்.
பொதுவா நாட்டுக்கோழிக் குழம்புக்கு நாட்டுக்கோழி அடிப்பது வேறு! சண்டைச் சேவல் நாட்டுக் கோழி குழம்பு சாப்பிட்டு இருக்கிங்களா? சேவற் சண்டையில் ஒரு கண் போனது, இறக்கை அடி வாங்கியது, நிறைய அலகு குத்து வாங்கியது, காலில் அடிபட்டது போன்ற சேவல்களை பலர் கறிக்கு விற்றுவிடுவார்கள்.
கோவை, கணபதியில் செஞ்சோலை நடத்தும் இயற்கை விளைபொருட்களின் வார சந்தை வரும் 25ஆம் தேதி முதல் சூலூர்.செஞ்சோலை-யை மையமாகக் கொண்டு தொடங்குகிறது.












