ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடும் முறையை தவிர்க்க முயலுங்கள்; எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அறிவுறுத்தல்
வாசகர் கம்பம் ரமேஷ் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் மதுரையிலிருந்து பேசினார்.
"அண்ணே உங்ககிட்ட ஒரு நிமிஷம் பேசலாமா?"
"பேசலாம் ரமேஷ் ....என்ன விஷயம்?"
கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான, ஹாஸ்பிடல் பெயரைச் சொல்லிவிட்டு அங்கே இருக்கக்கூடிய டாக்டர்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்.
" விஷயம் என்னான்னு சொல்லுங்க ரமேஷ் "
"என்னுடைய நண்பருடைய மகள் கோவையில் தங்கி,அங்கே உள்ள கல்லூரியில்படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஆன்லைனில், அசைவ உணவுக்கு ஆர்டர் செய்து வாங்கி, சாப்பிட்டு இருக்கிறாள்.
Must Read: பயிர்களைக் கொல்லும் பாராகுவாட் , மனிதர்களை கொல்லும் நாள் தொலைவில் இல்லை…
அந்த உணவு ஃபுட் பாய்ஸன் ஆகி, உடல் நிலை கெட்டு, பக்கத்தில் இருக்கும் ஒரு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் உடனே மகளின் தந்தை, இப்போது நான் சொன்ன பெரிய ஹாஸ்பிடலில் அனுமதித்துவிட்டார்.

ட்ரீட்மெண்ட் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அந்தப் பெண்ணின் மருத்துவ ரிப்போர்ட்டில் பெண்ணின் கணையம், சாப்பிட்ட ஃபுட் பாய்ஸன் உணவால் செயல்படாமல், இருப்பதாக டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். பெண்ணின் தந்தை கலங்கிப் போயிருக்கிறார்.
நீங்கள் அந்த ஹாஸ்பிடல் டாக்டர்களிடம் பேச முடியுமா?"
"இல்லை ரமேஷ் ,எனக்கு அந்த ஹாஸ்பிடல் டாக்டர்களை,
தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் திறமையான டாக்டர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடுவார்கள். கவலை வேண்டாம்.ஆனால் ஃபீஸ் லட்சக்கணக்கில் எகிறும் "
மறுமுனையில் வாசகர் கம்பம் ரமேஷ் கவலையோடு, பெருமூச்சு விடும் சத்தம் என்னுடைய செல் போனில் கேட்டது.
இனி நீதிபோதனை
கூடியவரை ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் முறையை தவிர்க்க முயலுங்கள். அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடவே சாப்பிடாதீர்கள். சாப்பிட வேண்டுமென்றால் நேரடியாகவே ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுங்கள். உணவில் குறைபாடு, சுகாதாரக் கேடு இருந்தால், அங்கே உங்களால் சொல்ல முடியும் . ஆனால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவை நீங்கள் சாப்பிட்டே ஆகவேண்டும்.
மறுபடியும் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும் நாம்தான் காரணம். மோசமான உணவை சப்ளை செய்யும் உணவகங்களின் பட்டியலைச் சொல்லுங்கள் என்று சில முகநட்புகள் என்னிடம் கேட்கிறார்கள். அது என் பணியல்ல.நீங்களே தேர்வு செய்துக் கொள்ள வேண்டியதுதான். ஆன்லைன் உணவை தவிர்ப்பது நல்லது என்று சொல்ல வருவதே என் பதிவு.
நன்றி; திரு.ராஜேஷ் குமார்
#foodpoison #foodpoisonhealthaffect #onlineorderfoods #writerrajeshkumar

Comments
View More