பயிர்களைக் கொல்லும் பாராகுவாட் , மனிதர்களை கொல்லும் நாள் தொலைவில் இல்லை…


வேளாண் நிலங்களில் களைக் கொல்லிகளை உபயோகிப்பது இன்று மிகவும் சகஜம். களைகளை அகற்ற கூலி ஆட்கள் கிடைக்காமல் போவதும், அதற்கான செலவும் மிகவும் அதிகம் என்பதுமே காரணங்கள்.

பஞ்சாப் உழவர்கள், பச்சைப்பயிறை அறுவடை செய்ய, செடி காயும் வரை காத்திருக்காமல், களைக் கொல்லிகளை உபயோகித்து செடியைக் கொன்று அறுவடையைத் துரிதப்படுத்துகிறார்கள். வேளாண்மையில் அதீத இரசாயன உபயோகம், பூமியின் உயிர்ச்சூழலைச் சிதைக்கும்.. புற்று நோயை உருவாக்கும் எனப் பல தசாப்தங்களாக அறிஞர்கள் கரடியாகக் கத்தி வருகிறார்கள். 

Must Read: கொண்டாட்டம், அறுசுவை உணவை தாண்டி கவனம் பெறும் மொய் விருந்து கலாச்சாரம்..

ஆனால், வேளாண் துறையின் திட்ட வல்லுனர்கள் தலையை மணலுக்குள் புதைத்துக் கொண்டு கண்டும் காணாமல் கடந்து செல்கிறார்கள். சமூக ஊடகங்களில், இதன் வீரியம் புரியா தொழில்கல்வி/மருத்துவம் படித்த பலர் அரைவேக்காட்டுத்தனமாக, இரசாயன உபயோகிப்பை அல்லோபதி மருத்துவம் போல புரிந்து கொண்டு உளறுகிறார்கள்.

கேடு விளைவிக்கும் இராசயனங்கள்

பஞ்சாப்பில்  பாராகுவாட்  இரசாயனத்தின் பரவலான பயன்பாடு மாநிலத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாராகுவாட் இரசாயனத்தால் மனிதர்களுக்கு  கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பயிர்களை கருகச்செய்யும் ஒரு கொல்லியாக இந்த இரசாயனத்தை பயன்படுத்துவதை தடை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பாராகுவாட்  பல நாடுகளிலும் கேரளாவிலும் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பாராகுவாட் இரசாயனம் கொண்ட உணவுப் பொருட்களை உண்ணும்போது அந்த ரசாயனத்தில் எச்சங்கள் வாய், வயிறு அல்லது குடலின் உட்புறத்திற்கு சென்று உடலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

உடலுக்குக் கேடான இந்த இரசாயனங்கள் இன்று மனிதர்களின் உணவுச் சங்கிலியில் இரண்டறக் கலந்து விட்டன. வேளாண்மைத் தொழில் தொடர்ந்து நஷ்டமாவதற்கும், இரசாயன உபயோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.வேளாண் துறையை அணுகத் தேவை முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை.

Curtesy:  Balasubramaniam Muthusamy

#banparaquat #Paraquat #Paraquatuse #pubjabfarmers

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
 

 


 


Comments


View More

Leave a Comments