சென்னையில் நடைபெற உள்ள 2 வேளாண் நிகழ்வுகளை தவறவிடாதீர்…
காளான் வளர்ப்பு, சிறுதானிய உணவு பயிற்சிகள்
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 6 ஆம் தேதி காளான் வளர்ப்பு தொடர்பாகவும், 7ஆம் தேதி சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு தொடர்பாகவும் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற உள்ளது.
காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சியில் காளான் வளர்ப்பு, காளான் குடில் அமைத்தல் , காளான் அறுவடை உள்ளிட்ட பயிற்சி மற்றும் சீரமைப்பு முறைகள், செயல் முறைகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
Must Read: மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தூதுவளை மிகப்பெரிய பொக்கிஷம்
சிறுதானிய உணவு வகைகள் பயிற்சியில் தினை அரிசி பாயசம், தினை உருண்டை, சிறு தானிய அடை, கேழ்வரகு ரொட்டி, கம்பு களி, சிறுதானிய காரா சேவ், பனிவரகு உப்புமா ஆகிய உணவு வகைககள் கற்றுத் தரப்படும்.
இதில் கலந்து கெள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 அல்லது 29530049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு தலைவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல் தளம், சிப்பெட் எதிரில், திரு வி க தொழிற்பேட்டை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
வேளாண் வணிக விழா
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) வேளாண்மை-விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து நடத்தும் வேளாண் வணிக விழா வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண்மை - விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து நடத்தும் இந்த வேளாண் வணிகத் திருவிழா, விவசாயிகள் தங்கள் நலனை மேம்படுத்தவும், சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தவும் ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்வதன் மூலம், விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை அணுகலாம், பல்வேறு சந்தை வழிகளை ஆராயலாம் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஒரு விவசாயியாக உங்களை மேம்படுத்தவும், உங்கள் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், விவசாயத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேலும் தகவலுக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் பிரதிநிதியை 7200818155 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
#Chennaievents #agricultureevents #farmersevents #agribusiness
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments