தக்காளி விலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான குரல் வலுப்பெறாதது ஏன்?
தக்காளி விலை கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் முக்கிய பேசு பொருளாக ஆகியிருக்கிறது தக்காளி.உச்சகட்டமாக நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்பதாக இருக்கிறது.தக்காளியின் விலை உயர்வை விவாதிப்பதற்காக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடை.பெறுகிறது.
மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று அரசு செயல் படுவதை வரவேற்கிறோம்.ஒரு விவசாயியாக தக்காளி பயிர் செய்யும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் சார்பாக கேட்கிறேன்.
Must Read: சென்னையில் நடைபெற உள்ள 2 வேளாண் நிகழ்வுகளை தவறவிடாதீர்…
தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு சீ...சீ...என்று சீரழிந்த போதும் அதை பறித்தால் நஷ்டம் என்று சம்சாரிகள் செடியிலேயே அழுகிப் போகும் படி விட்ட போதும் தரையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை காட்டிய போதும் எந்த அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ அல்லது நிவாரணம் தரவோ பிரச்சினையை ஆராயவோ முன் வரவில்லை.வழக்கம் போல் இடதுசாரிகள் கள்ள மௌனம் சாதித்தார்கள்.
கிராமங்களில் விவசாயிகளுக்கு என்று தாட்டீகமாக போராடி பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு போக வலுவான அமைப்புக்கள் இல்லை. முழுமையாக நம்பிய இடதுசாரிகள் அரசு ஊழியர்களுக்காக செயல்படுகிற அளவு விவசாயிகளுக்காக செயல்படுவதில்லை. விவசாயிகளுக்காக போராடும் தைரியமும் நம்பிக்கையும் ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களோடு முடிந்தது.
தக்காளி விலை மட்டும் கண்ணுக்கு தெரிகிறதா?
பூமியிலிருந்து எடுக்கப்படும் சிமெண்ட், இரும்பு, பெட்ரோல் ஆகாய விலை விற்கப்படுகிறது.ஐந்து ரூபாயில் தயாரிக்கும் சாராயம் ஐநூறு ருபாய்க்கு விற்கப்படுகிறது. விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு கொடுக்கும் பருத்தியை துணியாக்கி பஞ்சமாபாதக விலைக்கு விற்கின்றனர்.இந்த விலைகளையெல்லாம் போடுகிறீர்களா ஊடகங்களே.
தக்காளி விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா? இந்த விலையில்கூட எங்களுக்குக் கிடைப்பது பத்தில் ஒரு பங்கு மட்டும்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?.உழவர்களின் ஒற்றுமையின்மையில் அனைவரும் குளிர் காய்கிறீர்கள்.
#tomatoprice #tomatopricetamilnadu #tomatopricechennai tomatofarmer
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments