உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பேருயிர்களுக்காக ஒரு நாள் பயணம்…


உலக யானைகள் தினத்தையொட்டி கோவை சதாசிவம் ஐயாவுடன் சிறப்பு காடறிதல் பயணம். இல்லாத காட்டினுள் இல்லாத யானையை நம் அடுத்த தலைமுறைக்கு காட்டப் போகிறோமா.இல்லை யானைகளின் வாழிட்டத்தினை பாதுகாக்க இப்போதிருந்தே முயற்சிகள் எடுப்போமா.அப்படி ஒரு பயண வழி கற்றல் இந்த காடறிதல் பயணம். முக்கியமாக இம்முறை யானைகளுக்காக...

காடறிதல் பயணம் வரும் ஆகஸ்ட் மாதம் 19,20, ( சனி & ஞாயிற்றுக் கிழமை) ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க  9790388452 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் அறியலாம். 

Must Read: “பெரும் நுகர்வை குறைத்துக் கொள்ள முயற்சிப்போம்…”

சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் வாழ்ந்த மக்கள் யானைகளோடு கொண்டுள்ள உறவின் நீட்சியாய் சங்க இலக்கியத்தில் யானையை அறுகு , ஆம்பலாரி , இபம் , இம்மடி , எறும்பி , ஐராவதம் , ஓங்கல் , கசம் , குஞ்சரம் , கூங்கைமா , சாமசம் , சிந்தூரம் , சூகை , தாராடம் , துருமாரி , தெள்ளி , நூழில் , பந்தகி , பென்னை , பேசகி , மறமலி , வாரணம் , வழுவை , வேழம் என 170க்கும் மேற்பட்ட பெயர்களை சூட்டியுள்ளனர் ..

ஆண் யானைக்கு 'களிறு' என்று பெண் யானைக்கு 'பிடி' என்ற தனித்த பெயர்களும் உண்டு சங்க இலக்கியத்தில் மிகுதியாக காணும் யானைகளின் பெயர்கள் அனைத்தும் சுட்டுப் பெயர்களே. பொதுப்பெயர் (ஆனை) இளமைப் பெயர் (கன்று, குழவி)ஆண்பாற் பெயர் (களிறு ,வேழம்)பெண்பாற் பெயர் (பிடி, பெட்டை) என்று அறிய முடிகிறது.

உலக யானைகள் தினம்

ஒரு உயிரினத்தின் மீது இவ்வளவு சுட்டுப் பெயர்கள் கொண்ட மொழியைப்  பேசுகிறோம், எழுதுகிறோம், வாசிக்கிறோம், சிந்திக்கிறோம்,வாழ்கிறோம் என்பது பெருமிதம்தான்.ஆனால் இன்று நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவது எல்லாம் elephant என்னும் ஒற்றைச் சொல்தான்.

நிலத்தில் வாழ்கிற உயிரினங்களில் யானை என்கிற பாலூட்டிதான் இருப்பவற்றிலேயே மிகப் பெரிதானது. அந்த பெரிதான உயிருள்ள உருவத்தின் மீது மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு பிரமிப்பான பார்வை உண்டு...

பல நூறு ஆண்டுகளாக அந்த பிரமாண்டமான உருவத்தை தமக்கேற்றபடி பழக்குவதில் மனிதன் வெற்றிகொண்டான் எனத்தான் சொல்ல வேண்டும். அல்லது யானைகளை ஏமாற்றி, தமது அறிவின் துணைகொண்டு, யானைகளை தமது பயன்பாட்டிற்காக பழக்கப்படுத்திக் கொண்டான் எனவும் சொல்லலாம்...

பல நூறு ஆண்டுகளாக மனிதப் பெருக்கம் விரிவடைந்து கொண்டே வந்த விளைவினால், தொடர்ந்து காடழித்து, காடழித்து மனிதர்களது வாழ்விடம் வெகுவாக அகன்றபின் மற்ற உயிரினங்களின் வாழ்விடத்தை சுருக்கியே வந்தவிட்ட காரணத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவை யானைகள்தான்.

Must Read: தலையில் பொடுகு போன்ற அரிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை...

சமவெளி எங்கும் பரவியிருந்த யானைக் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே அடைத்து விட்டதோடு, அந்த குறுகிய எல்லைக்குள்ளும்கூட யானைகள் வாழமுடியாத சூழலை சமீப காலத்தில் நாம் உருவாக்கிவிட்டோம் என்பதே எதார்த்தமான உண்மை...

பெரும்பாலான சமவெளி பகுதி முழுவதும் காடாகத்தான் இருந்தது. ஆனால் இற்றைக்கு நாம் காடென வரையறுத்து வைத்திருப்பது, மலையும் மலைச்சரிவை ஒட்டிய பகுதிகள் மட்டுமே. சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த யானைகளை இந்த குறுகிய இடங்களில் மட்டுமே வாழ நிர்பந்திப்பது ஒருவிதமான கொடுமைதான்...

மலை முகடுகள் எங்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகள் எங்கும் கான்கிரீட் கட்டிடங்களால் ஆன சொகுசான ரிசார்ட்கள், ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்கள், இராணுவ தளங்கள், இரயில்வே மற்றும் மின்சார லைன்கள், சாலைகள் மற்றும் தடுப்பணைகள் என குறுக்கும் நெடுக்குமாக கூறுபோட்டாகிவிட்டது..

வாருங்கள் இதற்கான தீர்வுகளைப் பற்றிப் பேச பேருயிர்களுக்காக ஒரு நாள் பயணிப்போம்…

#worldelephantday #understandelephantslife #importanceofwildforest #wildlifetourtoforest 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments