
“பெரும் நுகர்வை குறைத்துக் கொள்ள முயற்சிப்போம்…”
சென்னை புனித தாமஸ் கல்லூரி வணிகவியல் துறை மாணவர்களுடன் அண்மையில் 4 நாட்கள் தினசரி 3 வகுப்புகளுக்களில் சூழலியல் வேளாண்மை , இயற்கை உணவு, நமது சூழலியல் கடமைகள் , சமூக பொறுப்புணர்வு எனும் தலைப்புகளில் பேசிடவும் கலந்துரையாடவும் வாய்ப்பு நேரிட்டது. இந்த நல் வாய்ப்பை திரு பாமயன் ஐயா ஏற்படுத்தி தந்தார்
வீட்டுக்குள் பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயன பொருட்களை குறைப்பதுவும் முக்கியமாக வீட்டின் குளியலறை கழிவறை பயன்பாட்டில் உள்ள செயற்கை ரசாயனங்களை குறைத்துக்கொண்டு Bio-enzyme போன்றவற்றை பயன்படுத்தவும் பெரும் நுகர்வை குறைத்துக் கொள்ளவும் முயற்சிப்போம் என மாணவர்கள் விழிப்புடன் உரையாடினேன்.
கல்லூரி மாணவர்களை சந்தித்தது பெரும் நம்பிக்கையுமாக அமைத்தது. மாணவர்களிடம் நிறைய புத்தகங்கள் வாசிக்க கேட்டுக் கொண்டேன் முக்கியமாக ஐயா நம்மாழ்வார் , திரு.பாமயன் , தோழர் எழுத்தாளர் நக்கீரன் மற்றும் பூவுலகு நண்பர்களின் பதிப்புகள் ஆகியவையோடு நமது பொதுமறை "திருக்குறள்" ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தேன் .
கல்லூரி நிர்வாகத்தினரும் பொறுப்புணர்வு மிக்க பேராசிரியர் திருமாவளவன் அவர்கள் அக்கறையுடன் மாணவர்களுக்கான சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகளை உருவாக்கி நம்பிக்கை உண்டாக்கினார்.
#awarnessamongstudents #awarnessatalk #tedtalk #organictalk #enviromentaltalk
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments