500வது நாளாக தொடரும் நடிகர் கார்த்தியின் குறைந்த விலை உணவு சேவை
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான 25ஆவது திரைப்படம் ஜப்பான் கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியானது. 'ஜப்பான்' திரைப்படத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 17 முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்கினர்.
கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்வின் தொடக்க விழாவின் போது பேசிய கார்த்தி ரசிகர் மன்றத்தினர் , 'நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 25ஆவது திரைப்படம் 'ஜப்பான்'. இதனை முன்னிட்டு 25ஆயிரம் பேருக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார்.
Must Read: சர்க்கரை இல்லாத விருந்து…மலைவாழ் மக்களின் திருமண விழா
அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கத் திட்டமிட்டோம் என்று கூறினார். திட்டமிட்டபடி சென்னையின் பல்வேறு இடங்களில் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 500 நாட்களாக தினமும் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான வெஜிடபிள் பிரியாணி ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகரம் எங்கும் மணிக்கணக்காக அலைந்து திரியும் ஸ்விக்கி, சொமாட்டோ, கொரியர் சர்வீஸ் செய்யும் நபர்கள், தொழிலாளர்கள் இங்கு உணவு உண்கின்றனர்.
முற்றிலும லாப நோக்கம் எதுவும் இன்றி அதே நேரத்தில் சுவையான உணவை குறைந்த விலையில் வழங்கும் இந்த பணி கடந்த 17.02.2024 அன்று 500 நாட்களைத்தொட்டிருக்கிறது. வாழ்த்துகள் கார்த்தி. தொடரட்டும் உங்கள் பணி.
#ActorKarthi | #KarthiMakkalNalaIyakkam | #Chennai | #Food
ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments