வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?


வேளாண்மை பயின்ற இளைஞா்கள் தொழில்முனைவோர் ஆவதற்கு மானியம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசின் அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா வெளியிட்டுள்ள செய்தியில்,  தமிழ்நாடு அரசின் வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மூலம் இளைஞா்கர்ளை வேளாண் தொழில் முனைவோா் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Must Read: யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…

வேளாண்மையில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களைக் கொண்டு வளா்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி வேளாண்மையை வளா்ச்சி அடையச் செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வழங்கும் வாய்ப்பு

நடப்பு நிதியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டட் ம் செயல்படுத்தப்பட உள்ளது. சுய தொழில் செய்ய விருப்பமுள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படித்த 21 வயதிலிருந்து 40 வயதிற்குள் உள்ள இளைஞா்கள் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை மானியம் பெறலாம்.

Must Read: சென்னை, கோவையில் நடைபெற்ற 2 வேளாண் நிகழ்வுகளின் பதிவு…

 

 

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கிகடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழிலைத் தொடங்க முன் வரும் பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

தகுதி உள்ள இளைஞா்கள் சம்பந்தபட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பயனடையலாம்,“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#agriculturnews #agrientrepreneur  #agristudent #tnagridepartment 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments