யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு, பிஇ பொறியல் படிப்புகள் மட்டுமே உயர் கல்வி வாய்ப்புகள் இல்லை. இந்த படிப்புகள் மட்டுமே உயர்ந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்பதும் பொதுவான ஒரு நம்பிக்கை மட்டுமே. பிஇ பொறியியலில் பல்வேறு பிரிவுகளில் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர் என்பதும் உண்மை.
மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்காதவர்களுக்கு சரியான மாற்றாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகள் திகழும் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் 17 தனியார் யோகாமற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
Must Read: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பேருயிர்களுக்காக ஒரு நாள் பயணம்…
யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 993இடங்கள் மற்றும் 2 அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் என மொத்தம் 1,153 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கான மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு பணிகளை தமிழ்நாடு மருத்துவத்துறை மேற்கொள்கிறது. மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Must Read:“பெரும் நுகர்வை குறைத்துக் கொள்ள முயற்சிப்போம்…”
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை அரும்பாக்கம் ஹோமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#yogadegree #naturopathycourses #yogacourses #naturopathicmedicalcourse
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments