சென்னை, கோவையில் நடைபெற்ற 2 வேளாண் நிகழ்வுகளின் பதிவு…


உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்காக அரசு சார்பில் ;சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடத்தப்பட்ட வேளாண் வணிக திருவிழா வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பதற்கான  மிகச் சிறப்பான முன்னெடுப்பு. 184 அரங்குகளிலும் மரச்செக்கு எண்ணெய் இல்லாத அரங்கு இல்லை. அரசாங்க திட்டத்தில் வந்த விளைவு இது.

ஆனாலும் மரச்செக்கு எண்ணெயின் நன்மைகள் மக்களிடையே சென்று சேர்ந்து  இருப்பது. முருங்கை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை தேடி மக்கள் அலைவதும். பாரம்பரிய அரிசிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வந்திருப்பதும்... மிகச் சிறப்பான ஒன்று. சென்னை வேளாண் வணிக விழா

சினிமாக்காரர்கள் சொல்வது போல் மக்கள் விரும்பியதை தான் நாங்கள் கொடுக்கிறோம் என்று சமூகத்தை சீரழிக்காமல் ..  புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றம்.. கூலி ஆட்கள் பிரச்சனை எந்த நிலையிலும் உதவாத அரசாங்கங்கள்.. எல்லா நஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு.. நல் விதையை நிலத்தில் விதைப்பதை போல் மக்கள் மனதில் விதைத்த.. மாற்றத்தை முன்னெடுத்த.. என் இனம் தான் இந்நாட்டின் தேசத்தந்தைகள்.

நம்ம ஊரு சந்தையில் எதிர்கால தலைமுறைகள்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று நடைபெறும் கோயம்புத்தூர் நம்ம ஊரு சந்தையில் குடும்பமாக வந்து மக்கள் கூடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும், குழந்தைகளுக்கு கதை சொல்லல், மரபு விளையாட்டுகள், காகித மற்றும் பனையோலை பொம்மைகள் செய்து கொடுப்பது, பாடல் என குழந்தைகள் மகிழ்ந்து திரியும் விருப்ப இடமாக இருக்கிறது.

கோவை நம்ம ஊரு சந்தை

ஒவ்வொரு மாதமும் குழந்தைகளை அழைத்து வரும் குடும்பங்கள் அதிகரித்துள்ளது பெருமகிழ்ச்சி. ஜூலை மாத நம்ம ஊரு சந்தையில் நம் மனதை மகிழ்வித்த மழலைகளை புகைப்பட வடிவில் காணலாம். 

-அசோக்குமார், குமரன் ஆர்கானிக்ஸ் முகநூல் பதிவுகள்

கோவை ஒளிப்படங்கள்: சாமுவேல் Sam Malkiswa

#agribusinessfestival #agrievent #agriculture #organicevents 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments