மாடித்தோட்டம் அமைக்க வேண்டுமா? தோட்டக்கலை துறை வெளியிட்ட அறிவிப்பு...


வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் விதை, பை, உரம், ஆகியவை மானிய விலையில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.  

வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மானிய விலையில் ‘கிட்’ வழங்கப்படுகிறது.

Must Read: பயிர்களைக் கொல்லும் பாராகுவாட் , மனிதர்களை கொல்லும் நாள் தொலைவில் இல்லை…

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகுப்பில், ஆறுவகையான காய்கறி பாக்கெட்டுகள், செடிவளா்ப்பு பைகள், தென்னை நார்க்கழிவு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, உயிரியல் பூச்சிக்கொல்லி டிரைகோடொ்மா, வேப்பஎண்ணெய் இவற்றுடன் செயல்முறை விளக்க குறிப்பேடும் உள்ளது. இந்த தொகுப்பின் விலை ரூ.900. ஆனால், தோட்டக்கலை துறையின் சார்பில் 50 சதவிகித மானியவிலையில் அதாவது ரூ.450க்கு வழங்கப்படுகிறது.

மாடித்தோட்டம் அமைக்க உதவி

அதே போல பழச்செடிகள் வளர்ப்பு திட்டத்துக்கும் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ரூ.250 மதிப்புள்ள மா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சப்போட்டா ஆகிய ஐந்து வகையான பழச்செடிகள் ரூ.50க்கு வழங்கப்படும்.

Must Read: வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?

மாடித்தோட்ட கிட்,  பழச்செடிகள் வாங்க விரும்புவோர் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில், தங்கள் புகைப்படத்தையும், ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து இணைத்து தேவையான காய்கறி தொகுப்புகளையும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம், இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும்.

உங்கள் அருகில் உள்ள மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது தோட்டக்கலை பண்ணைகளில்  ஆதார் அட்டை நகலை கொடுத்து விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பையை, நீங்கள் பெற்று கொள்ளலாம். விற்பனையகங்களை தேடி வரும் மக்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் அதைப் பராமரித்தல் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது.

#terracegardenkitregistration #terracegarden #gardenkit 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments