
மரக்கன்றுகள் நட ஏற்ற மாதம் எது தெரியுமா?
பராமரிப்பு உள்ள நிலமாக இருந்தாலும் சரி அல்லது மானாவாரி மேட்டு நிலம் ஆயினும் சரி மரக்கன்றுகள் வைக்க நாங்கள் தேர்ந்தெடுப்பது அதிகம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதமே. இது நாள் வரை எங்கள் அனுபவத்தில் ஒரு சில மரக்கன்றுகளைத் தவிர பிழைக்கன்றுகள் ஆனதே இல்லை அனைத்தும் உயிர்த்திருக்கின்றன.
1. முதலில் நாங்கள் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான கன்றுகள்.
2. அதிலும் குறைந்தது ஒரு வருடம் ஆன கன்றுகள் ( கிடைத்தால் அதற்கு மேலும்) ஓரளவிற்கு விலை இருக்கும் என்றாலும் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். அதை ஒரு வருடத்திற்குப் பராமரித்து வளர்க்கும் வேலையோடு ஒப்பிடும் பொழுது அந்தப் பணம் குறைவுதான்.
Must Read: மேட்டூர் அணையில் சரிந்த தண்ணீர் மட்டம்… டெல்டா சம்பா சாகுபடி குறைந்தது..
3. கன்றுகளின் தன்மைக்கேற்ப அதாவது தேக்கு, மகோகனி போன்றவற்றில் பக்க கிளைகள் இல்லாமல் அடித்தண்டு உறுதியாக இருக்கக் கூடிய கன்றுகளாக பார்த்துத் தேர்ந்தெடுக்கிறோம். கொய்யா மா போன்ற பழ வகைகள் எனில் பக்கக் கிளைகள் இருக்கிற செடியாகத் தேர்ந்தெடுக்கிறோம்.
4. எப்பொழுதும் தாராளமாக இரண்டுக்கு இரண்டு அடிக் குழிகளே எடுக்கிறோம்.
5.வசதி கருதி குழிகளை ஆக்கர் மெஷின் உபயோகப்படுத்திப் போட நேர்ந்தாலும் பக்கம் பக்கமாக ஏழு எட்டுத் துழையிட்டுக் குழியை அகலப்படுத்திக் கொள்கிறோம்.
6. குழியில் மேல்மண் கலந்து எருவிட்டு ஆறிய பின்பு மரக்கன்றுகள் நடுகிறோம். பிறகு மேல் பகுதியில் வேப்பம் புண்ணாக்கு கலந்து இலை தழை குப்பைகளால் குறைந்தது ஒரு அடிக்கு மேலாக மூடாக்கு இட்டு உயிர் தண்ணீர் விடுகிறோம். அதிகபட்சம் அடுத்த வாரம் ஒரு நாள் மீண்டும் மற்றொரு தண்ணீர் விடுகிறோம். செடி உயிர் தாங்கி வளர இதுவே போதுமானதாக இருக்கிறது. செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெய்யும் மழைத் தண்ணீர் மட்டுமே மரங்களைக் காப்பாற்றிக் கொடுத்து விடுகிறது.
#TreePlantingChallenge #TreePlantation #மரக்கன்றுவளர்ப்பு #சுற்றுச்சூழல் #பழமரத்தோட்டம்
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments