
மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம்
பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று இருக்கும்
அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும்
உரிய ஆலோசனையின் பேரில் சாப்பிடுங்கள்
விந்தணு குறைபாட்டை போக்க உதவும் துரியன்
இயற்கையின் கொடையில் விளையும் பழங்கள் எண்ணற்ற சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளன. மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் சில பழங்கள் சில நோய்களை தீர்க்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. அத்தகைய பழங்களில் துரியன்பழமும் ஒன்றாம். இந்த பழம் பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று இருக்கும். ஆனால், பலாப்பழம் அளவுக்கு பெரியதல்ல. சிறியதாகத்தான் இருக்கும்.
துரியன் பழத்தில் உள்ள சத்துகள்
துரியன் பழத்தில் முக்கியமான வைட்டமின் சி மற்றும் பி ஆகியவை உள்ளன. இதுதவிர ஃபோலேட், தியாமின் போன்ற வைட்டமின் பியின் சத்துகளும் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துகள் மிதமான அளவில் உள்ளன. நார்சத்து, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு ஆகியவை உள்ளன.
யாரெல்லாம் துரியன் பழம் சாப்பிடலாம்
முழு துரியன் பழத்தையும் ஒருவரால் சாப்பிட்டு விட முடியாது. சாப்பிடவும் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் சூட்டை கிளப்பிவிடும். எனவே மருத்துவர்களின் ஆலோசனையுடன் துரியன் பழம் எடுத்துக் கொள்வது நல்லது. அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, துரியன்பழம் சாப்பிட்டுவிட்டு மதுவோ அல்லது சாராயம் போன்றவற்றையோ குடிக்கக் கூடாது. எதிர்வினை ஏற்படக் கூடும்.
இதையும் படியுங்கள்: இயற்கை வழி வேளாண்மையின் வழிகாட்டி கோமதிநாயகம் மறைவு
துரியன் பழத்தில் உள்ள சதைப்பகுதியானது மஞ்சள்காமாலைக்கு சரியான தீர்வாக இருக்கும். துரியன் பழம் மட்டுமின்றி இதன் வேர்கள் நகம் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகத் திகழ்கிறது. அதன் இலைகளுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்
துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு சத்து நிலையான ரத்த அளவைப் பராமரிக்க உதவும்.இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் ரத்தசோகையைப் போக்கும். கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் துரியன் பழம் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெற முடியும். விந்தணுக் குறைபாடு கொண்ட ஆண்கள் துரியன் பழம் சாப்பிடுவதால் உரிய பலன் கிடைக்கும். தாது பலம் பெற்று விந்தணுக்கள் பலம் பெறும்.
பற்களையும், எலும்பு மண்டலத்துக்கும் துரியன் பழம் வலுசேர்க்கும். வயது முதிர்வு தோற்றத்தை தவிர்க்க உதவும். தேவையற்ற கொழுப்புகளை குறைத்து நன்மை செய்யும் கொழுப்புகளை தக்க வைக்க உதவும். தைராய்டு ஹார்மோன் அளவை சீராக வைக்க உதவும்
\துரியன் பழ மரத்தின் இலை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு தரும். இது தவிர துரியன் பழத்தை தின்ற உடன் தோலை கீழே போட்டு விடக் கூடாது. துரியன் பழதோலின் வாயிலாக நமக்கு ஏற்படும் தோல் நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படை, சொறி, சிரங்கு ஆகிய தோல் நோய்களுக்கு துரியன் பழத்தின் தோல் சிறந்த தாகும்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது
வாந்தி எடுப்பது போன்ற உணர்வு கொண்டவர்கள் துரியன் பழத்தை நிச்சயமாக சாப்பிடக் கூடாது. பிறந்து சிலமாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் துரியன் பழம் தரக்கூடாது. துரியன் பழத்தை சாப்பிடும் முன்பு முதியவர்களிடமோ அல்லது சித்தமருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் சாப்பிடுவது மிகவும் நல்லது. எதிர்வினை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
இதையும் படியுங்கள்: தர்ப்பை, துத்தியின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
எங்கு கிடைக்கும்?
துரியன் பழத்தை சாப்பிட்டால் மலட்டு தன்மை சீராகும் என்பதன் காரணமாக இந்த பழத்துக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே பலர் வணிக நோக்கில் அதிக லாபம் பெறும் வகையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை சார்பில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் பர்லியார் உள்ளிட்ட அரசு பழப்பண்ணைகளில் துரியன் பழம் கிடைக்கிறது. பர்லியாரில் மட்டும் 35 துரியன் பழ மரங்கள் பராமரிக்கப்படுகின்றன.
துரியன் பழத்தின் சீசன் என்பது மழைகாலங்கள்தான். சீசன் தொடங்கிய உடன் நாளிதழ்களில் அரசின் தோட்டக்கலை சார்பில் துரியன் பழம் எப்போது என்ன விலையில் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதனை பார்த்து வாங்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#DurianFruit #DurianFruitHealthBenefits #HealthyDurianFruit
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments