அக்டோபர் 21 இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்  

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

வேலூரில் நம்சந்தை

நம் சந்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு, 93 வது வாரம்- நம் சந்தை 24.10.2021 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று  காலை 6.00 மணிமுதல் 11.00 மணிவரை மட்டும் நடைபெறும். பூமாலை வளாகம், மகளிர்திட்டஅலுவலக வளாகம்,அண்ணாசாலை, வேலூரில் சந்தை நடைபெறுகிறது. 

நம்சந்தையில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டவைகள் மட்டும் விற்பனைச் செய்யப்படுகின்றன. இயற்கை விவசாயிகள் நேரிடையாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள் விவசாயிகள் காய்கறிகள்  பழங்கள் கீரை வகைகள், இவைகளுடன் அரிசி, சிறுதானிய வகைகள், நாட்டு சக்கரை, எண்ணெய் வகைகள் அனைதையும் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள் உழவர் சந்தை விலையினைவிட 20% கூடுதலாக  கொண்டு விலைப்பட்டியல் பலகை சந்தையில் வைக்கப்படுகிறது. இந்த விலையில் மட்டுமே விற்கப்படும். விலை கூட்டவும்படாது  குறைக்கவும்படாது.கொரானா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும்

விவசாயிகள் தங்கள் தொடர்பில் உள்ள பிற நம் சந்தை விவசாயிகளுக்கும் தகவல் கொடுத்து நம் சந்தைக்கு அழைத்து வாருங்கள். புதிய இயற்கை விவசாயிகளையும் வரவேற்கிறோம்.வாடிக்கையாளர்கள் அவசியம் நம் சந்தைக்கு வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்  .சந்தையில் பெருகும் ஆதரவே .இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த வாய்ப்பளிக்கும். தொடர்புக்கு; கு.செந்தமிழ் செல்வன், நம் சந்தை, ஒருங்கிணைப்பாளர்      9443032436

மரபு தின்பண்டங்கள் விற்பனை மீண்டும் தொடக்கம் 

சூலூர் செஞ்சோலையில் மரபு தின்பண்டங்களை நஞ்சில்லாமல் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, சிறுதானியங்கள், நாட்டுச் சர்க்கரை, கலப்படமில்லா கடலை எண்ணெய் மூலம் தயாரிக்கிறோம்.

Also Read:தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

ஊரடங்கு கால இடைவெளிக்குப் பின் நண்பர்கள தொடர்ச்சியாக கேட்டு வருவதால், தற்போது பயிற்சி & விற்பனையை மீண்டும் துவங்குகிறோம்.

மரபு திண்பண்டங்கள் மீண்டும் விற்பனைக்கு

 சிறிய அளவிலும்,கடைகளுக்கு & நிகழ்வுகளுக்கு மொத்தமாகவும் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும்  புதன் & வியாழக் கிழமைகளில் தயாரித்து, வெள்ளி & சனி ஆகிய நாட்களில் விற்பனை செய்ய உள்ளோம். ஆர்டர்களுக்கு அளவாக மட்டுமே தயாரிக்கிறோம். ஆவூர்.முத்து 9600873444, செந்தில் குமரன் 9566665654 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.  செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை,சூலூர், கோவை என்ற முகவரியில் கிடைக்கும். 

மூலிகை சீயக்காய் விற்பனைக்கு (15 வகை மூலிகைகளின் கலவை)

சீயக்காய், பூந்திக்கொட்டை, வெட்டிவேர், நெல்லிக்காய், பாசிப்பயிறு, ஆவாரம்பூ, வேம்பு, மரிக்கொழுந்து மற்றும் சில.உட்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும் 100 கிராம் விலை 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மூலிகை சீயக்காய் விற்பனைக்கு

பயன்கள்

மூலிகை சீயக்காய் முடி வேர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விட்டமின் D மற்றும் C போன்ற ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. பொடுகை தடுக்கவும் பொடுகை எதிர்த்து போராடவும் மூலிகை சீயக்காய் உதவுகிறது. மூலிகை சீயக்காய் கூந்தலை மினுமினுப்புடனும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது.  பூஞ்சைத் தொற்று, கிருமிகளால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கும். சமூக வலைதளங்கள் தொடர்புக்கு Facebook  https://www.facebook.com/iniyalnaturalproducts/ , Telegram https://t.me/iniyalnaturalproducts   மொபைல் எண் தொடர்புக்கு- 9445903067

மரச்செக்கு எண்ணெய் விற்பனைக்கு 

நம் அறல் கழனி தயாரிப்பான அறல் மற்றும் நஞ்சில்லா விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது கையிருப்பில் உள்ள கருங்குருவை அரிசி-20கி (மட்டுமே உள்ளது), கருங்குருவை அவல்-200கி உள்ளது, நாட்டு சர்க்கரை-500கி உள்ளது, கொத்தவரை வத்தல்-10கி,சாம்பார் பொடி-10கி மிளகாய் தூள்-2கி ஆகியவை விற்கப்படுகின்றன. 

Also Read: தமிழ்நாடு முழுவதும் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி.. அன்னாபிஷேகம்


தீபாவளிக்கு மரச்செக்கு எண்ணெய் விற்பனை அருமையாக நடக்கிறது.  பொருட்கள் தேவைபடுவோர் முன்பதிவு செய்யவும். புதன் மற்றும் சனி கிழமைகளில் பார்சல்கள் அனுப்பப்படும்.உழவர் வ.சதிஸ்.அறல் கழனி,கோட்டப்பூண்டி,மேல்மலையனூர் என்ற முகவரியிலும், 8940462759 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்


Comments


View More

Leave a Comments