தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்
வேளாண் பயிற்சி முகாம்கள்
வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள்
மரபுவழி பயிற்சிகள்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
" விதைகளே பேராயுதம்" ஒரு நாள் பயிற்சி..
ஊத்துக்குளியில் வானகம் நடத்தும் விதைகளே பேராயுதம்" என்ற ஒரு நாள் பயிற்சி 24/10/2021 - ஞாயிறு காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தென்னை, மஞ்சள், வாழை சாகுபடி தொழில்நுட்பம் .( விதைப்பு முதல் அறுவடை வரை), பாரம்பரிய நெற்பயிர் வகைகள் சாகுபடி தொழில்நுட்பம், ( விதைப்பு முதல் அறுவடை வரை).. பூச்சிக்கட்டுப்பாடு, . நோய் தாக்குதல் பாதுகாப்பு, மதிப்புக் கூட்டல் (தென்னை, மஞ்சள், வாழை), சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இவற்றோடு மழை நீர் அறுவடை, இயற்கை உர மேலாண்மை, சூரிய ஒளி மின்சாரப் பயன்பாடு..ஆகியவை பற்றியும் விரிவாக அறியலாம்.
சத்தியமங்கலம் திருமூர்த்தி அவர்கள் (ஏர் முனை இயற்கை வேளாண் பண்ணை.), நித்தியானந்த் அவர்கள் (வேம்பு விவசாய குழுமம் - மதுரை)ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.
புதிதாக இயற்கை வழி வேளாண்மையில் பண்ணையை வடிவமைக்க விரும்புவோருக்கு இந்த இருவரின் வழிகாட்டுதலும், இருப்பும் பெரும் வரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Also Read: தமிழ்நாடு முழுவதும் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி.. அன்னாபிஷேகம்
பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் தென்னை, வாழை, மஞ்சள் ஆகியவற்றை சாகுபடி முதல் சந்தைப்படுத்துதல் வரை அனைத்தையும் இரு பெரும் களப்பணியாளர்களின் அனுபவங்கள் வாயிலாக அறிந்து கொள்வோம்.. பயன்பெறுவோம்..பயன் பெற விழைவோர் முன் பதிவு செய்ய 9942118080 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூ 500 (மதிய உணவு தேநீர் உட்பட) வசூலிக்கப்படும். 25 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. இயல்வாகை குழந்தைகள் நூலகம், ஊத்துக்குளி, திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும்.
ஒருமாத இயற்கைவழி வேளாண்மை பயிற்சி முகாம்
சூலூர்.செஞ்சோலை அமைப்பு ஒருமாத இயற்கைவழி வேளாண்மை பயிற்சி முகாமை வரும் நவம்பர்-8 முதல் நடத்துகிறது.இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சியில் உணவு & ஏற்பாடு செலவுகளை பயிற்சியில் பங்கேற்போர் பகிர்ந்து கொள்வோம். பயிற்சியில் இயற்கைவழி_வேளாண்மை, மரபு தின்பண்ட தயாரிப்பு ,சிலம்ப பயிற்சி, ஆகியவற்றை ஒருமாதம் பண்ணையில் வாழ்ந்து கற்றுக்கொள்ளலாம்.
Also Read: சிறுதானியங்களை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு மேம்படுகிறது
இயற்கைவழிவேளாண்மை நேரடிக் களப்பயிற்சியில் நிரந்தரவேளாண்மை (மேட்டுப்பாத்தி , இருமடிப்பாத்தி , வட்டப்பாத்தி அமைத்தல்), காய்கறி & கீரை சாகுபடி, கால்நடை பராமரிப்பு, இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு , ஒருங்கிணைந்த பண்ணையம், சந்தைப்படுத்துதல் என வேளாண் வாழ்வியலின் கூறுகளை அனுபவப்பூர்வமாக வாழ்ந்து கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயிற்சி அமையும்.
இது தவிர மரபு தின்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சியும் வழங்கப்படும். 10 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். முன்பதிவு_அவசியம் முன்பதிவு செய்ய செந்தில் குமரன் - 84897 50624, ஆவூர்.முத்து - 9600873444 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியானது, செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை, கலங்கல் சாலை,சூலூர், கோவை என்ற முகவரியில் நடைபெறும். இடத்துக்கான வரைபடத்தை காண்கவும். https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8
#AgriEvents #OrganicTraining #NaturalLife
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments